நடிகர் விஜய் சினிமாவில் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாத்தை ஏற்படுத்தி ரசிகர்களால் தளபதி என்று அழைத்து வந்தனர். விஜய்க்கு இந்தியாவை கடந்து சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் மெல்ல மெல்ல வளர்ந்த விஜய்க்கு தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த ரசிகர்களை கொண்டு தான் தளபதி விஜய் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் விஜயை பங்கமாக மறைமுகமாக கலைத்துள்ளார் ஆர் ஜே பாலாஜி.
தளபதி விஜய் லியோ படத்தி தொடர்ந்து முதன் முறையாக இயக்குனர் வெங்கட்பிரபு கூட்டணியில் இணைந்து த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபுதேவா மற்றும் பிரசாந்த் நடிப்பதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் தன்னை முழுமையாக அரசியலில் ஈடுபடுத்தி பணியாற்றுவார் என்றும் கூறப்படுகிறது.
சினிமாவில் துணை நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் ஆர்.ஜே பாலாஜி ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிகராக எல். கே. ஜி படம் மூலம் நடிக்க தொடங்கினார் அதன் பிறகு மூக்குத்தி அம்மன் என ஹிட் படங்களை கொடுத்து வந்தார். தற்போது சிங்கப்பூர் சலூன் கடை என்ற படத்தில் நடித்த அவர் சமீபத்தில் இதன் ட்ரைலர் வெளியிடப்பட்டிருந்தது. ஆர்ஜே பாலாஜி சினிமாவிற்கு முன்னதாக ரேடியோவில் ஒளிப்பதிவாளராக இருந்தார். அதனை காரணமாகவே இன்றி வரை ஐபில் போட்டி மற்றும் இந்தியா ஆணி கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழில் கமெண்டிரியாக செயல்பட்டு வருகிறார். இவர் தபோது விஜயை கலாய்த்து விட்டார் என்று அஜித் ரசிகர்கள் இணையத்தில் போட்டி போட்டு வருகின்றனர்.
விஜயே ஒருமுறை பாலாஜியை அழைத்து தனக்கு ஒரு கதை சொல்ல கூறியிருக்கிறார், அதற்கு பாலாஜி தன்னிடம் இப்போது எந்த கத்தியும் இல்லை என்றும் உங்களுக்காக ஒரு கதை கூடிய விரைவில் தயாரித்து வறுகிறான் என்று சொல்லிவிட்டு சென்றாராம். சினிமா மற்றும் கிரிக்கெட் போட்டி கமெண்ட்ரியில் எப்படி பாலாஜி வாயை துடுக்காக பேசுவரோ அதே போல தற்போது நேரிலும் பேசி மாட்டி கொண்டார். இடது விஜய் ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூர் சலூன் பாடம் இந்த வாரம் வெளியாகவுள்ளது அதற்காக பாலாஜி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சின்னத்திரை நடிகர்களை சந்தித்து வருகிறார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக kpy பாலாவை சந்தித்து நேர்காணலில் பேசியிருந்தார். அதேபோல் ப்ளாக் ஷீப் தொலைக்காட்சியில் முன்னதாக நடித்த விஜே சித்து சொந்தமாக ஒரு யூடூயூப் சேனலை வைத்து நடந்து வருகிறார். அவர்களுடன் சிங்கப்பூர் சலூன் படம் தொடர்பாக ப்ரோமோஷன் நடத்தியுள்ளனர். அப்போது அவரிடம் பேசுகையில், குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படம்னு நான் சொல்லவே இல்லையே என ஆர்ஜே பாலாஜி சொல்ல, அவ்ளோதான் அண்ணா குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என விஜே சித்து சொல்ல, அப்படி சொல்லவே பயமா இருக்குடா, இப்போ எல்லாம் சுமாரா ஓடுற படத்துக்குத் தான் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என போடுறாங்கன்னு ஆர்ஜே பாலாஜி ட்ரோல் செய்ய அண்ணே நீங்க அந்த படத்தை சொல்லலையே என கலாய்த்துள்ளனர்.
இந்த வீடியோவை வாரிசு படத்தில் விஜய் “குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி” என சொல்லும் வசன காட்சியுடன் எடிட் செய்து அஜித் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இதனால் இணையத்தில் அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் போட்டி போட்டு வருகின்றனர். சிங்கப்பூர் சலூன் படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.