24 special

திமுகவிற்கு அடுத்து வர போகும் பெரிய ஆப்பு....! உத்தரவு போட்ட ஸ்டாலின்

mk stalin, nr elango
mk stalin, nr elango

நீதிபதியையும் நீதிமன்ற தீர்ப்பையும் விமர்சனம் செய்ய கூடாது என்ற விதி இருந்தாலும் அதை பல நேரங்களில் அரசியக் கட்சிகள் கண்டு கொள்வது இல்லை அப்படி நேற்று நீதிபதியை அவர் முன்னே விமர்சனம் வைக்க சென்றுதான் தற்போது பெரிய ஆப்பை திமுகவிற்கு மட்டுமல்ல பொன்முடிக்கும் வைத்து இருக்கிறது.பொன்முடி வழக்கில் நேற்று உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது, பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் அபராதமும் வழங்கியது நீதிமன்றம் இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி தரப்பு வழக்கறிஞர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது நீதிபதி அதிமுக ஆட்சியில் சட்ட துறை செயலாளராக இருந்தார், நீதிபதி என்பவர் சட்டத்திற்கு அப்பார் பட்டவராக இருக்க வேண்டும் எனவும் நீதிமன்ற தீர்ப்பிர்கு உள் நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசி இருந்தார்.


இந்த நிலையில் தான் நேற்று வழக்கு விசாரணையின் போதே உள்ளே நடந்து கார சார சம்பவம் வெளியாகி இருக்கிறது, நீதிபதி தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் பொன்முடி மற்றும் அவரது மனைவியிடம் உங்கள் கருத்தை சொல்லுங்கள் என கேட்டார் அதற்கு இருவரும் எங்கள் வயதை கருத்தில் கொண்டு தண்டனையை குறைத்து தாருங்கள் என கூறி இருந்தார்.அதற்கு நீதிபதி தவறு செய்தது தவறுதான் உங்களிடம் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் எனக்கு மேலே உச்ச நீதிமன்றம் இருக்கிறது அங்கு சென்று முறையிடுங்கள் என ஒரே போடாக போட்டு இருக்கிறார்.அப்போது தான் உள்ளே வந்த திமுக மூத்த வழக்கறிஞர் நீதிபதி அவர்களே நீங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்து பொன்முடி கோப்பை கையாண்டு இருக்கிறீர்கள் அது இப்போது தான் எனது கட்சி காரர் பொன்முடிக்கு  தெரியவந்தது  என கூறி இருக்கிறார் அதற்கு நீதிபதியோ சரி அதற்கு என்ன இப்போ?

அது வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னர் நடந்த விஷயம் நீங்கள் இதை முன்பே கூறி இருந்தாலும் நான் வழக்கு விசாரணையில் இருந்து விலகி இருக்க மாட்டேன் என ஒரே போடாக போட்டார் இதை கேட்ட நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர் அதிர்ச்சியில் பொன்முடி தரப்பிற்கு வாய் அடைத்து போனது.அதன் பிறகு மெல்லிய குரலில் என் ஆர் இளங்கோ ஐயா உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை காலமாக உள்ளது எனவே நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் அதான் 30 நாள் சரண் அடைய அவகாசம் வழங்கி இருக்கிறேன் அதில் பார்த்து கொள்ளுங்கள் என தீர்ப்பை முடித்தார் நீதிபதி.

மொத்தத்தில் நீதிபதி மீது தனிப்பட்ட முறையில் திமுக வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்ப சென்று பொன்முடிக்கு கிடைக்க வேண்டிய குறைந்த பட்ச சலுகை கூட கிடைக்காமல் செய்து விட்டார்கள் இது ஒருபுறம் என்றால் பொது வெளியில் தற்போது நீதி பதியை திமுகவினர் விமர்சனம் செய்ய தொடங்கினால் தானாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அரசிற்கு எதிராக எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் தயாராக இருப்பதாகவும் தகவல் வந்து இருக்கிறதாம்.இதையடுத்து திமுக அமைச்சர்கள் தொடங்கி யாரும் தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்ய கூடாது என முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு போட்டு இருக்கிறாராம்.