சனாதனம் ஒழிப்பு மாநாட்டில், சனாதனத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், இந்த மாநாட்டிற்கு சனாதன ஒழிப்பு என்று பெயர் வைத்தது வரவேற்கத்தக்கது என்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் அந்த மாநாட்டில் பங்கேற்று பேசினர்.தமிழக மக்களிடம் மட்டும்மின்றி நாட்டில் உள்ள பலரும் திமுக அமைச்சருக்கு எதிராக குரல் எழுப்பினர்.
அவர்கள் அனைவரும் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என விளக்கமளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி தரப்பில் கடந்த விசாரணையில் அமைச்சரை எந்த அடிப்படையில் பதவி நீக்க செய்யவேண்டும் என்றும் "சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? என்ற கேள்வி எழுப்பினார்.
தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை," என்று வாதாடினார். மேலும், விசாரணையை நீதிமன்றம் விசாரித்து 31ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த வழக்குகளை கண்டு நான் பயப்பட்டமாட்டேன், அமைச்சர் பதவியே போனாலும் நான் பயப்படமாட்டேன் என்று தெரிவித்திருந்தார். இப்போது இந்த கோவரண்டோ விசரணையை பார்க்கும்போது அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
திமுகவிற்கு கொள்கை தான் முக்கியம் என்று பேசிய உதயநிதி. நீதிமன்றத்தில் உதயநிதி அடிக்கிற பல்டியை பார்த்து திமுக மட்டும் அல்ல திராவிட கொள்கையை கொண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதற்கிடையில் அமைச்சர் பதவி தான் முக்கியம் என்று அதனை காப்பாத்தி கொள்வதற்கு உதயநிதி இறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த சனாதன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது மார்ச்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி என்றும் மனுதாரர் முழு ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை எனவே இந்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல உடனடியாக தள்ளுபடி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவரிடம் ஆதாரங்களை கேட்பது என்று இந்திய அரசியல் சட்டத்தில் விரோதம் என்றும் இந்த வழக்கினை மனுதாரர் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்று குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கை விசாரிக்க போதிய அவகாசம் கேட்கப்பட்டதால் நவம்பர் 7ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அடுத்த விசாரணையில் மனுதாரர் முழுமையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் உதயநிதி பதவி குறித்து முக்கிய தீர்ப்பு கொடுக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.