24 special

அதிமுக கவுன்சிலர்கள் மீது நாற்காலியை பறக்கவிட்ட திமுக நிர்வாகிகள்!

dmk, admk
dmk, admk

கோயம்பத்தூர் மாவட்டம் அடுத்த மேட்டுப்பாளையம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மெஹரீ பாபர்வீன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் கோரிக்கை சம்பந்தமான அடிப்படை தேவை வசதிகளை வேண்டி ஆலோசனை நகர மன்ற உறுப்பினர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.இன்று நடந்த மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இருவர். நகராட்சியில் பல பகுதிகளில் ஒன்றரை மாதமாக தூய்மை பணி சரிவர மேற்கொள்வது கிடையாது.


இது தொடர்பாக பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். சுகாதார அதிகாரிகளிடம் பேசினால் அவர்கள் முறையாக பதில் அளிப்பது இல்லை.மேலும் அதிகாரிகள் இல்லாமல் நகராட்சி கூட்டம் நடத்த கூடாது. அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் அவர்களது வார்டு பணிகளை கூறினால் அவர்கள் அலட்சியமாக பதில் கூறி பணியை புறக்கணிக்கின்றனர். நகர பகுதிகளில் சரிவர குப்பைகள் அள்ளுவது கிடையாது.

தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால் டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தனர்.நகர்மன்ற சாதாரண கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே தேவையை கேட்கும்போது அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக இந்த வாக்குவாதம் குப்பைகளை அள்ளுவது தொடர்பாகவே ஆரம்பித்தது என்று கூறப்படுகிறது. இந்து வாக்குவாதம் கடைசியில் தீவிரமடைந்து ஒருவருக்கொருவர் கைகலப்பு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது.

அப்போது தி.மு.க வார்டு உறுப்பினர் ரவிக்குமார் ஆத்திரமடைந்து கூட்டரங்கில் இருந்த நாற்காலியை எடுத்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது வீசினார். மேலும் அங்கிருந்த மைக்கை உடைத்து தாக்க முயற்சி செய்தார். இதையடுத்து இரு தரப்பினர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நிலவியது.அப்போது அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகராட்சி கூட்டத்தில் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரி கூட்டஅரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து இன்று நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் அனைத்தும் இரு கட்சிகளிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக நகராட்சித் தலைவர் மெஹரீபாபர்வீன் கூறி கூட்டத்தை முடித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

ஆனால் அ.தி.மு.க வார்டு உறுப்பினர்கள் 9 பேரும் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிமுக வார்டு உறுப்பினர்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் இதுபோல் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது தமிழ்நாட்டில், நேற்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர். பாஜக நிர்வாகிகளை தாக்கினர். இப்போது மேட்டுப்பாளையத்தில் அதிமுக நிர்வாகிகளை தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ. சமூக தளத்தில் பரவி வருகிறது.