24 special

எல்லாம் உதயண்ணா ராஜதந்திரம்...! காலியாகப்போகும் திமுக காங்கிரஸ் கூட்டணி...!

udhayanithi, p. chidambaram
udhayanithi, p. chidambaram

சனாதனத்தை பற்றி உதயநிதி பேசியது  நாட்டில் பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது உதயநிதி பேசியதற்கு வட இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் யாருமே ஆதரவு தெரிவிக்கவில்லை மாறாக காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் கூட சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு தங்கள் கண்டனத்தை தான் தெரிவித்தனர். இந்தநிலையில் உதயநிதி சனாதனத்தை பற்றி பேசியது தவறு என்று தென்னிந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்தே உதயநிதி பேசியதற்கு எதிராக தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.அதுமட்டுமில்லாமல் உதயநிதி பதவி விலக வேண்டும் என பாஜகவை சேர்ந்தவர்களும் இந்துத்துவத்தை மதிப்பவர்களும் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை செய்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலின் தான் பேசியதை தவறு என்று உணராத பட்சத்தில் மீண்டும் அது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தான் பேசி வருகிறார் எனவும் இது திமுகவிற்கு பின்னடைவுதான் எனவும் அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளது.


இதை கருத்தில் கொள்ளாமல் 'இந்தியாவில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் திராவிட மாடல் ஆட்சியில் மிகவும் பிரதானமாக விளங்கும் சமூக நீதியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்பதுதான் திமுக கட்சியின் மிகப்பெரிய கொள்கை' என்று உதயநிதி கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சனாதனம் பற்றிய பேச்சுக்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் ஜி 20 மாநாடு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு எதிர்க்கட்சித் தலைவரை அழைக்காதது தான் மன வருத்தமாக இருக்கிறது என்று தெரிவித்தார். மேலும் தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதாவது இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு பாஜகவிற்கு என்ன நோக்கம்  இருக்கிறது என தெரியவில்லை ஆனால் நல்ல நோக்கமாக இருந்தால் இரண்டு பெயரையும் வைக்கலாம் என்று கூறினார் மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இப்படி பாஜக அரசு அடுத்தடுத்து கொண்டு வந்துள்ள திட்டங்களை எல்லாம் மிகக் கடுமையாக விமர்சித்த ப.சிதம்பரம் சனாதனம் பற்றி எழுந்துள்ள சர்ச்சைக்கு தற்போது பதில் அளித்துள்ளார்.சனாதனத்தை பற்றி ப.சிதம்பரம் பேசுகையில் வடநாட்டில் சனாதனம் என்பது இந்து மதமாகத்தான் அனைவரிடத்திலும் பார்க்கப்படுகிறது, ஆனால் தமிழகத்தில் சனாதனம் என்பது சாதியவாதம், பெண் இழிவு என்று அனைவராலும் புரிந்து கொள்ளப்படுகிறது மேலும்  எம்மதமும் சம்மதம்  என்பதுதான் காங்கிரசின் கொள்கையாக உள்ளது எனவே நாங்கள் இந்த சர்ச்சையில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை என்று எஸ்கேப்பாகும் விதமாக பதில் கூறியுள்ளார். அதாவது உதயநிதி சனாதனத்தை பற்றி தவறாக புரிந்து கொண்டு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளதையே தான் மறைமுகமாக ப.சிதம்பரம் குறிப்பிட்டு பேசியுள்ளார். இவ்வாறு ப.சிதம்பரம் தமிழகத்தில் சனாதனம் என்பது சாதிய வாதமாகத்தான் பார்க்கப்படுகிறது என்று மறைமுகமாக உதயநிதியை தாக்கி பேசியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர், மேலும்  சனாதனம் பற்றி தவறான கருத்தை புரிந்து கொண்டு பேசுவது ஆபத்தை ஏற்படுத்தும் என ஏற்கனவே அரசியல் விமர்சகர்கள் கூறியது போல அதே கருத்தை தான் ப. சிதம்பரமும் கூறியுள்ளார்  கண்டிப்பாக இது திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்துபோக பிள்ளையார் சுழி ஆகும் என விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.