உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது தற்போது அகில இந்திய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில் இது குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாரத பிரதமர் மோடி இதற்கு எதிராக தனது கருத்தை தெரிவித்ததுடன் பாஜகவினர் அனைவரும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இந்தியா என்ற கூட்டணியில் ஒருங்கிணைந்துள்ள காங்கிரஸ் கட்சியும் சனாதனத்தை மிகப்பெரிய அளவில் மதிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் தற்போது உதயநிதியின் பேச்சை கண்டித்துள்ளனர் இது மட்டுமல்லாமல் கூட்டணி கட்சியிலிருந்து திமுகவை விலக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் சனாதனத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது வடமாநிலங்களில் உள்ளவர்களை அதிகமாக பாதித்துள்ள நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் சாமியார் உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்திருந்தார் என்ற தகவல்கள் வெளிவந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றிய தனது பேச்சுக்கு தான் பேசியது சரிதான் என்றும் இதனால் வரும் விளைவுகளை சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளேன் என்று கூறியதோடு ஏன் ஆட்சியே போனாலும் பரவாயில்லை சனாதனம் பற்றி அவர் பேசியது 100% சரியானதுதான் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். மேலும் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி பேசியதே மிகப்பெரிய தப்பு என்று சமூக ஊடகங்களிலும் சமூக வலைத்தளத்திலும் அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் தான் பேசியதில் வேறு உறுதியாக இருக்கிறேன் என்று கூறியது திமுகவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கடுமையாக பாஜக அரசை பற்றியும் ஒன்பதாண்டு கால ஆட்சியை பற்றியும் மீண்டும் தாக்கி பேசியுள்ளார் அதாவது பாஜக ஆட்சிக்கு வந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவையே மாற்றி காட்டுவோம் என்று கூறியதற்கு ஏற்ப தற்போது இந்தியாவின் பெயரை மாற்றி உள்ளார் என்று விமர்சனம் செய்தார் மேலும் திமுக தான் சனாதனத்திற்கு எதிராகவும் சமத்துவத்திற்கு ஆதரவாகவும் தொடங்கப்பட்ட கட்சி என்பதால் இந்த ஆட்சியயேப் போனாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று கூறியது திமுக தலைமையை கதி கலங்க செய்துள்ளது. மேலும் உதயநிதி ஸ்டாலினின் இந்த திமிரான பேச்சால் திமுக கட்சி என்ன நிலைமைக்கு ஆளாக போகிறதோ என்று கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின் உத்திரபிரதேச மாநிலத்தில் ஒருவர் என் தலையை வெட்டுவதற்கு 10 கோடி என்று சொல்கிறார் இன்னொருவர் பத்து லட்சம் என்று கூறுகிறார் போக போக எனக்கான டிமாண்ட் அதிகரித்துக் கொண்டே போகின்றது என்றும் திராவிட கழகத்தில் பெரியார் அண்ணா பேசாத சனாதனத்தை நான் ஒன்றும் பேசி விடவில்லை என்று கூறியதோடு இவர்கள் அனைவரும் என்னை விமர்சிப்பது மிகவும் நகைச்சுவையாக உள்ளது என்று கூறியுள்ளார்.மேலும் சனாதனத்தை பற்றி பேசியதில் பாஜகவை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சனாதனம் பற்றிய அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று எனக்கு புரியவில்லை என்று கூறினார்.உதயநிதி இவ்வாறு பேசியதால் திமுகவிற்கு தான் பின்னடைவு என்று அவரது குடும்பம் அறிவுறுத்திய நிலையில் தேவையில்லாமல் பேசி விட்டோமோ என்று முதல்வர் குடும்பத்தார் வருந்தியதாக தெரிகிறது மேலும் பேசுவதெல்லாம் பேசிவிட்டு இப்ப வருந்துவதில் என்ன பிரயோஜனம் என்று திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் முதல்வர் குடும்பத்திடம் கூறியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.