2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் முதல்முறையாக நரேந்திர மோடி பிரதமராக ஆட்சி பொறுப்பு ஏற்றார், அன்றிலிருந்து உலக அரங்கில் இந்தியாவின் புகழ் எதிரொலித்து வருகிறது. 2014க்கு பிறகு இந்திய பொருளாதாரம் 3.5 ட்ரில்லியன் டாலரை தாண்டியும் அந்நிய செலவாணியின் கையிருப்பு 50 லட்சம் கோடிக்கு மேலும் சென்றது. 2019 இல் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடியே ஆட்சி பொறுப்பை ஏற்று உலக அரங்கில் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவை மூன்றாவது இடத்தில் அமர வைத்தார். மேலும் அவரது சொந்த தொகுதியான வாரணாசி முன்பிருந்ததை விட உயர்தர முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இனிமேல் காஷ்மீரை யாராலும் பயங்கரவாதத்திலிருந்தும் பயங்கரவாத அச்சத்தில் இருந்தும் மீட்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் காஷ்மீரை ஒரு உற்சாகமான மற்றும் மன அமைதியை தரக்கூடிய சுற்றுலா தலமாக மாற்றி தற்போது அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் எந்த ஒரு குண்டு சத்தமும் இல்லாமல் சென்று வருவதோடு அப்பகுதியில் இருக்கும் மக்கள் தங்களின் கலாச்சார விழாக்களை கொண்டாடவும் வழிவகை செய்தார். சுற்றுலாப் பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மட்டும் காஷ்மீரின் அழகை கண்டு ரசிக்க வில்லை உலக நாடுகளின் பிரதிநிதிகளும் காஷ்மீரில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்டு ரசித்தனர். மேலும் புதிய நாடாளுமன்றம் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டு பிரம்மாண்டமாக அதன் திறப்பு விழாவும் நடந்து முடிந்தது அதோடு அவரது ஆட்சியில் மற்றொரு சிறப்பு அம்சமாக வந்தே பாரத் ரயில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்புகளை பெற்று வருகிறது. இவை அனைத்தும் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது.
இந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்திற்குள் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி முடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதற்காக பாஜக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது. இது குறித்த சில செய்திகளும் அயோத்தி கோவிலின் கட்டமைப்புகள் பற்றிய வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை பெற்று வந்த நிலையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பிரம்மாண்டமாக அதன் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்படி திடீரென்று கோவிலை திறப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டது பாஜக கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராமர் கோவிலை திறந்து அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குள் தேர்தல் வர இருப்பதால் வட இந்தியாவில் குறிப்பாக இந்துக்கள் மத்தியில் பாஜகவிற்கு ஆதரவு பெருகும் என்பதும், அதற்கு ஏற்ற வகையில் எதிர்க்கட்சிக் கூட்டணியை சேர்ந்த ஒரு கட்சி சனாதன ஒழிப்பு பற்றிய கருத்துக்களை தெரிவித்து சனாதன ஒழிப்பு பற்றி பேசுவதற்காக ஆட்சியே சென்றாலும் பரவாயில்லை கவலை பட மாட்டோம் என்று தெரிவித்தது எதிர்க்கட்சித் தரப்பினருக்கு பின்னாடைவை ஏற்படுத்தும் எனவும் இதற்காகவே திட்டங்களை தீட்டி பாஜக இந்த கோவில் திறப்பிற்கான தேதியை முடிவு செய்து அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த விவகாரம் தெரிந்து இடதுசாரிகள் தங்களது கதறல்களை தொடங்கியுள்ளனர். இப்பொழுதுதான் ஜூனியர் அரசியல்வாதி ஒருவர் கூறிய கருத்திற்கு இந்தியா கூட்டணி உடன்படவில்லை என்றும் அவரது கருத்திற்கும் இந்தியா கூட்டணிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது அதை நாங்கள் ஏற்கப் போவதில்லை என்ற கருத்துக்களை முன்வைத்துக் கொண்டிருந்தால் இந்த சூழ்நிலையவே தங்களுக்கு சாதகமாக பாஜக திருப்பிக் கொண்டது என்று அரசியல் விமர்சகர்களால் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது.