
செந்தில் பாலாஜி அரசியலுக்கு உலை வைத்த உதயநிதி ... செந்தில் பாலாஜி பதவி அம்போ...வெளிச்சத்துக்கு வந்த கோபாலபுரத்தின் சூழ்ச்சி!
தமிழக அரசியல் களம் தலைகீழாக மாறியுள்ளது. திமுக பலமாக உள்ளது என்ற பிம்பம் உடைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக மத்திய அமைச்சர்கள்,அமித்ஷா, பிரதமர் ஆகியோரின் தமிழகம் வருகை திமுகவில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. மேலும் தமிழகத்தில் 2026 தேசிய ஜனநாயக கூட்டணி தான் அமையும் என்பதில் உறுதியாக உள்ளார் அமித்ஷா இது திமுக தரப்பில் கிலியை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் திமுகவில் பெரிய அளவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் யாருக்கு தேதி கொடுக்கிறாரோ இல்லையோ ஜாமீன் அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டால் எத்தகைய நெருக்கடியான சூழலாக இருந்தாலும், செந்தில்பாலாஜி கேட்ட தேதியை கொடுத்து விடுவார் துணை முதல்வர்.
கடந்த மார்ச் 23ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் கோவைக்குச் சென்று அங்கே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்கான அறிவிப்புகளும் வெளியாகின. உதயநிதி கலந்து கொள்கிற விழா என்றதும்விழா ஏற்பாடுகளை நேரடியாக கவனித்து வந்தார் செந்தில் பாலாஜி. செய்திருந்தார்ஆனால் திட்டமிட்டபடி 23ஆம் தேதி அந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. இதை அடிப்படையாக வைத்து உதயநிதிக்கும் செந்தில் பாலாஜிக்கும் உரசல் என்ற பேச்சுகள் ஆரம்பித்தன.இது விழாவின் முந்தைய நாள் தான் செந்தில் பாலாஜிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 24ம் தேதி தான் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை வர இருந்தது.அதற்கு முந்தைய விசாரணைகளிலேயே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவி ஏற்றது சரியா, ஜாமீன் கொடுத்த ஓரிரு நாட்களிலேயே அவர் அமைச்சராக பதவி ஏற்றது எங்களுக்கு வியப்பை அளிக்கிறது என்றெல்லாம் உச்சநீதிமன்றம் கருத்துக்களை வெளியிட்டு இருந்தது.
இந்த சூழ்நிலையில் 24ஆம் தேதி விசாரணையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சில கடுமையான கருத்துக்கள் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வரலாம் என்றும், இந்த விவகாரம் மேலும் பல வகையில் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் தொடரலாம் என்றும் தகவல் திமுக தலைமைக்கு சென்றது.அந்த சூழலில் தான் கோவைக்கு இப்போதைக்கு செல்ல வேண்டாம் என துணை முதல்வர் உதயநிதிக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அந்த அடிப்படையிலேயே அவர் கோவை பயணத்தை ரத்து செய்தார் என்கிறார்கள்.
இதற்கிடையில் செந்தில் பாலாஜியை உச்ச நீதிமன்ற நீதிபதி ஓக்கா கடுமையாக சாடியதோடு 10 நாட்களுக்குள் பதில் தாக்கல் செய்ய வேண்டும் என கெடு விதித்தார். அதற்குப் பிறகு செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ததும், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் சென்னை செஷன் நீதிமன்றத்தில் ஆஜரானதும் என இந்த விவகாரங்களில் பரபரப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன”
திமுகவில் ஒருவர் வேலைக்காக பணம் பெற்ற ஊழலில் ஈடுபட்டுள்ளார், மற்றொருவர் பணமோசடி மற்றும் சட்டவிரோத செம்மண் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார், மூன்றாவது ஒருவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் வழக்கில் சிக்கியுள்ளார், நான்காவது ஒருவர் நிலக்கரி ஊழலில் தொடர்புடையவர், ஐந்தாவது தலைவர் 6,000 கோடி CRIDP திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் என்றெல்லாம் திமுக அமைச்சர்களின் பெயரைக் குறிப்பிடாமல் ஹிட் லிஸ்ட் போலவே கோவை வந்த போது மேடையில் வெளியிட்டார் அமித் ஷா.
மேலும் அடிக்கடி அமித்ஷா தமிழகம் வருவதனால் செந்தில் பாலாஜியின் உறவை துண்டிக்க திமுக தயாராகி விட்டதாம்.