Politics

திடீர் திருப்பம்... காட்டு தீயாக வைரலாகும் அண்ணாமலையின் மற்றொரு வீடியோ...திமுக பெரும் ஷாக்!

annamalai ,mkstalin
annamalai ,mkstalin

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.இந்த நிலையில், நிர்ணயத்தை விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்பட்டது.


இதனையடுத்து அந்த தகவலின் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இதனையடுத்து 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது அமலாக்கத்துறை இந்த தகவல்தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த சூழலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தசம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் உலகம் முழுவதும் மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது,மகாவீர் ஜெயந்தி அன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்று ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல் இயங்கிவருவதாக ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். 

அண்ணாமலை தனது சமூக வலைதளபக்கத்தில்  அரசு விடுமுறை அன்று கூட கடை அடைக்காமல் மது விற்பனை செய்தால்தான், டாஸ்மாக்கில் பல ஆயிரம் கோடி ஊழல் செய்ய முடியும்.மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, இன்றைய தினம், அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், புதுக்கோட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுகடையில், சட்டவிரோதமாக இன்று  மதுபானங்கள் விற்கப்படுகின்றன. 

இந்த சட்டவிரோத மற்றும் வணிக நேரம் முடிந்த பிறகு செய்யும் விற்பனைகள் அனைத்தும் கணக்கில் காட்டப்படாமல், நேரடியாக திமுக அமைச்சரின் பாக்கெட்டைச் சென்று சேரும்.திமுகவின் வசூலுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க, தமிழகத்தில் அரசு இயந்திரமே முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது. பட்டப்பகலில் திமுக நடத்தும் இந்தக் கொள்ளைகள் அனைத்தும், மிக விரைவில் முடிவுக்கு வரும் என கூறி வீடியோவை பகிர்ந்துள்ளார்.