
தமிழக அரசியல் களம் நேற்றைய தினம் அடியோடு மாறி இருக்கிறது மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா நேற்றைய தினம் பாஜக அதிமுக கூட்டணியை உறுதி செய்ததுடன் உடனடியாக அடுத்த ஆட்சி கூட்டணி ஆட்சி தான் என்று உறுதி செய்துவிட்டார்.
இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் பலரும் தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியது மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது போன்ற காரணங்களை மையமாக கொண்டு கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இப்போது என்ன வந்தது என தற்போது வரை கடுமையான விமர்சனம் எழுந்து வருகிறது இந்த சூழலில் நேற்றைய தினம் என்ன நடந்தது என்ற கேள்வி தான் பலருக்கும் எழுந்தது அந்த வகையில் குருமூர்த்தி வீட்டிற்கு சென்ற அமிட்ஷா தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து கேட்டரிந்தார்.
தமிழகத்தில் திமுகவை வீழ்த்த அதிமுக பாஜக என தனியாக பிரிந்து இருந்தால் வேலைக்கு ஆகாது அதே நேரத்தில் தமிழகத்தில் அண்ணாமலை பாஜகவின் முகத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்து இருக்கிறார் தமிழகத்தில் எந்தவித பவரும் இல்லாத ஒருவர் இத்தனை இடங்களில் பாஜகவை கொண்டு சேர்ப்பது என்பது மிக பெரிய விஷயம் எனவும் எப்படி கிராமங்கள் வரை பாஜக சென்று இருக்கிறது என விரிவாக தரவுகள் மூலம் விளக்கி இருக்கிறார் குருமூர்த்தி அப்போது அருகில் இருந்த அண்ணாமலையை அமித்ஷா பாராட்டி இருக்கிறார்.
மேலும் அதிமுக கூட்டணி தற்போது ஏன் தேவை என்பது குறித்து வெளிப்படையாக அண்ணாமலையிடம் அமிட்ஷா பேசி இருக்கிறார் மேலும் குட்டி ஸ்டோரி ஒன்றையும் அமிட்ஷா கூறி இருக்கிறார், குஜராத் கிரிக்கெட் வாரிய தலைவராக நான் பொறுப்பு ஏற்க போனேன் என்னுடன் வந்த அப்போதைய முதல்வர் மோடி ஜி கடைசி நேரத்தில் அவர் அந்த பொறுப்பை ஏற்பதாக கூறினார் சிறிதும் சங்கடம் இல்லாமல் சரி என்று சொன்னேன். வருக்கு அந்த பொறுப்பு என்பது பெரியது கிடையாது அதை அவர் நிர்வகிக்கவும் விருப்பவில்லை இருப்பினும் எதற்கு கேட்டார் என புரிகிறதா இது தான் அரசியல் என கூறியதுடன் தென் இந்தியாவில் ஒரு தலைவர் பதவியில் இல்லாமல் இந்தியா முழுவதும் ஆதரவலார்களை கொண்டு இருப்பது அண்ணாமலைக்கு தான் என விளக்கமாக கூறி இருக்கின்றார். இதன் பிறகு அடுத்த திட்டமிடல் என்பது என்ன என்பது குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது அதன் பிறகே கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
அண்ணாமலையை அரசியலுக்கு அழைத்து வந்த பி எல் சந்தோஸ் நேற்றைய தினம் அண்ணாமலை அரசியலுக்கு வந்தது பல நல்ல எண்ணங்களுக்காக அதே நேரம் அவர் பொறுப்பில் இருந்து இறங்கி இருப்பது அதை விட நல்ல நோக்கத்திற்காக என குறிப்பிட்டு இருக்கிறார்.
இவை அனைத்தையும் தாண்டி இந்தியாவில் தற்போது பாஜகவில் இளைய தலைமுறையை கவரும் ஆற்றல் கொண்ட பாஜக தலைவர்கள் குறைவாக இருக்கிறார்களாம் இந்த பட்டியலில் அண்ணாமலை இருப்பதால் விரைவில் யாரும் எதிர்பாராத வண்ணம் தற்போது மிகுந்த ஆவேசத்தில் உள்ள பாஜக மற்றும் தேசிய வாதிகள் மகிழ்ச்சியில் ஆழ்தும் வண்ணம் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தமிழகத்தை மையமாக கொண்டு பதவி அண்ணாமலைக்கு கொடுக்கப்படும் எனவும் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் இதுவரை கட்சிக்கு உண்மையாக உழைத்த நபர்களை அடையாளம் கண்டு உயர்த்தி இருப்பதாகவும் அதனால் அண்ணாமலைக்கு நிச்சயம் மாநில தலைவர்களை வழி நடத்தும் வகையில் புதிய பொறுப்பு மற்றும் அதிகாரத்திலும் முக்கிய இடம் கொடுக்கப்பட இருப்பதாக கூறுகின்றன டெல்லி வட்டாரங்கள்.