24 special

இளைஞரணி மாநாட்டில் மூத்த தலைவர்களை கோபத்தில் தள்ளிய உதயநிதி...?

Udhayanithi, Durai murugan
Udhayanithi, Durai murugan

திமுக சார்பில் கொங்கு மாவட்டமான சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் இளைஞரணி  மாநாடு நேற்று நடைபெற்றது. நாடாளுமண்ற தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் மாநாடு திமுகவுக்கு கைகொடுக்கும் வகையில் திட்டமிட்டிருந்தனர். பாஜகவுக்குஎதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேசமயம், இந்த மாநாட்டின் மூலம் திமுகவின் அடுத்த அதிகார முகமாக உதயநிதியை அக்கட்சி முன்னிறுத்துகிறது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. முன்னதாக இந்த மாநாட்டில் அதிகாரபூர்வமாக உதயநிதி துணை முதலமைச்சராக அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.  ஆனால், முதலமைச்சர் அதற்கு முற்று புள்ளி வைத்திருந்தார்.


இந்த மாநாடு மூலம் திமுகவின் பெருமான்மை காட்டும் என கூறப்பட்டது, மாநாடு தொடங்குவதற்குள் அந்த இடத்தில் பாட்டு கச்சேரி போன்று காவலா பாடலுக்கு நடனமாடியது இணையத்தில் சர்ச்சையாக மாறியது. மாநாடு என்பதால் தன் வசதிக்கேற்றாற்போல் காவலர்களை பயன்படுத்தி கொண்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். அங்கு காவலர்கள் 4 அடுக்கு பாதுகாப்பில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும், சேலம் மாவட்டத்தில் மாநாடு நடைபெறத்தால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது இதனால் ஈரோடு, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு செல்வோர் மிகவும் கஷ்ட்டப்பட்டனர் என்று இணையத்தில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். மாநாடு மூலம் பல்வேறு இன்னல்களை சந்தித்ததாக பொதுமக்கள் குற்றசாட்டு வைக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு நிவாரண தொகையை கொடுக்கவேண்டி டெல்லியில் திமுக போராடவும் தயாராக உள்ளதாக தெரிவித்தார், அமலாக்கத்துறையை அடியில் வைத்து கொண்டு ஆட்சி செய்யும் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர். தொடர்ந்து பேசிய உதயநிதி நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தலில் வேட்பாளர்களை திமுகவை சேர்ந்த இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் மேடையில் பேசினார். இந்த சம்பவம திமுகவில் உள்ள மூத்த தலைவர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, மேடையில் உதயநிதி கோரிக்கையாக வைத்தது ஒரு வேலை அமைச்சர்கள் எல்லாம் தற்போது ஊழலில் சிக்கி வருவதால் நாடாளுமன்றத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் திமுக கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று உதயநிதி பேசியிருக்கலாம் என கூறப்படுகிறது. 

ஆனால், உதயநிதி பேசியதும் திமுகவில் உள்ள மூத்த தலைவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மூத்த தலைவர்களகா நாங்கள் இருக்கும்போது எங்களை தாண்டி எப்படி இளைஞர்களுக்கு கொடுக்க கோரிக்கை வைக்கலாம் என்று கடும் கோபத்தில் இருப்பதாக திமுகவை சேர்ந்தவர்களே கூறுகின்றனர். ஏற்கனவே வாரிசு அரசியல் வருவது திமுகவிடையே குழப்பத்தை ஏற்படுத்தினாலும் அதனை ஏற்று கொண்டனர். இப்போது தேர்தல் சீட்டில் கைவைக்க உதயநிதி கேட்பதால் திமுகவில் மேலும் சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டில் உதயநிதி பேசும்போது பல நாற்காலிகள் சும்மாகவே கடந்தது, சீட்டு கட்டு விளையாடுவது தொடர்பான காட்சிகள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.