
என்னவளே அடி என்னவளே…எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்… என்ற பாடல் மூலம் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் அனைவரும் மனதையும் கவர்ந்த நடிகை நக்மா இந்த படத்தின் மூலமே தமிழ் திரையுலகில் வரவேற்பை பெற்றார். அதிலும் குறிப்பாக காதலன் திரைப்படமே நக்மாவின் முதல் தமிழ் திரைப்படமாகும் இதற்கு முன்பாக இவர் தனது நடிப்பு பயணத்தை பாலிவுட் திரையுலகில் ஆரம்பித்தார் என்றாலும் தென்னிந்தியாவில் அவர் தனது நடிப்பை தொடங்கிய பிறகு இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மராத்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளை சரளமாக பேசும் நக்மா இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பங்காளி, போஜ்புரி, பஞ்சாபி மற்றும் மராத்திய ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் அறிமுகமான காதலன் என்ற இவரது முதல் தமிழ் திரைப்படத்திலே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து ரஜினிகாந்தின் எவர்கிரீன் படமான பாட்ஷா படத்திலும் கதாநாயகியாக நடித்த நக்மா அதிகப் புகழ் பெற்றார்.
அதுமட்டுமின்றி காதலன் திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதைப் பெற்ற நக்மா 1993 முதல் 1997 இடையிலான காலகட்டத்தில் தமிழ் திரைப்படத்தின் முக்கிய கதாநாயகியாக வலம் வந்தவர். இவரது குடும்பத்தை பற்றி தேடும் பொழுது அவரது தாயார் இஸ்லாமிய மதத்தையும் தந்தையார் இந்து மதத்தையும் சேர்ந்தவர் மேலும் நடிகை நக்மாவிற்கு ஜோதிகா மற்றும் ரோஷினி என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. அதே சமயத்தில் நக்மாவின் மற்றொரு தங்கையான ரோஷினி சிஷ்யா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி வரவேற்பை பெற்றார் அதற்கு பிறகு தெலுங்கில் பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். ஆனால் இவரது திரை வாழ்க்கை பெரும் அளவில் வரவேற்பு பெறாத காரணத்தினால் திரையுலகை விட்டு விலகினார். அதற்குப் பிறகு ரோஷினி திருமணம் செய்து கொண்டு தனது குடும்ப வாழ்க்கையை தொடர்ந்தார். இப்படி நக்மாவின் சகோதரிகளான ஜோதிகா மற்றும் ரோஷினி ஆக இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நிலைத்திருக்க நக்மா மட்டும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்தார்.
முன்னதாக நடிகையின் நக்மா நடிகர் சரத்குமார், கிரிக்கெட் வீரர் கங்குலி, போஜ்புரி நடிகர் ரவி கிஷன் மற்றும் ஹிந்தி நடிகர் மனோஜ் திவாரி ஆகியோர் உடைய காதல் கிசுகிசுவில் சிக்கி பல விமர்சனங்களை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை நக்மா, அதாவது எனக்கு திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற எண்ணம் இல்லை எனக்கு ஒரு துணை மற்றும் குழந்தைகள் வேண்டும் என்று நினைக்கிறேன்! ஒரு குடும்பமும் திருமணத்தின் மூலமாக உருவாக வேண்டும் என் திருமணம் விரைவில் நடக்குமா என்பது தெரியவில்லை ஆனால் திருமணம் செய்து கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன் மகிழ்ச்சி என்பது வாழ்க்கை ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமல்ல தனக்கு துணை தேவைப்படுகிறது என்றும் பேசியுள்ளார். இவர் பேசிய இந்த கருத்துக்கள் அடங்கிய வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.