
கருணாநிதி ஸ்டாலின் போன்றோர் பொது மேடையில் பேசும் போது தங்களை நாத்திகர்களாக அடையாள படுத்தி கொள்வார்கள் ஆனால் எங்குமே தனது குடும்ப பெண்கள் இந்து இல்லை என்று எப்போதும் கருணாநிதியோ ஸ்டாலினோ பேசியது கிடையாது.. மேலும் தயாளு அம்மாள் தொடங்கி துர்கா ஸ்டாலின் வரை கருணாநிதி குடும்பத்து பெண்கள் அனைவரும் கோவில் கோவிலாக சென்று வருபவர்கள் தான்.
இவை அனைத்திற்கும் பல்வேறு அரசியல் கணக்குகள் இருப்பது அரசியல் தெரிந்த பலருக்கும் தெரிந்து இருக்கும், இந்த சூழலில்தான் சமீபத்தில் நடைபெற்ற தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி நான் ஒரு கிருஷ்தவன் என்றும் ஏன் நான் ஒரு இஸ்லாமியன் என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.
இதையடுத்து எனது மனைவி ஒரு கிறிஸ்தவர் என்று உதயநிதி குறிப்பிட்டார் இது கடும் விவாதத்தை அரசியல் அரங்கில் எழுப்பி இருக்கிறது, பொதுவெளியில் ஸ்டாலினோ கருணாநிதியோ தங்கள் மனைவிகள் எப்போதும் இந்துக்கள் இல்லை என உருவக படுத்தியது இதுநாள் வரை இல்லை ஆனால் தங்களை இந்துக்கள் இல்லை என தெரிவித்து வந்து இருக்கிறார்கள்.
தற்போது உதயநிதி அவரது மனைவி மதம் குறித்து பேசியது இதுநாள் வரை கருணாநிதி மற்றும் அவருக்கு பின் அரசியலுக்கு வந்து முதல்வராக இருக்கும் ஸ்டாலின் போன்றோர் இதுவரை பொதுவெளியில் பேசாத கதையாக இருப்பதால் தமிழக அரசியல் களம் எது போன்று உதயநிதி ஸ்டாலின் பேச்சை அடையாள படுத்த போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க மேடையில் எதை பேசவேண்டும் எதை பேச கூடாது என உதயநிதி அறிந்து கொண்டு பேசவேண்டும் தமிழக அரசியலில் இதுவரை திமுக தலைமை பொறுப்பிற்கு வந்தவர்கள் பேசாத ஒன்றை பேசி ஏற்கனவே திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று தீவிரமாக பாஜகவினர் விமர்சனம் செய்து வரும் நிலையில் அதில் எண்ணெய் ஊற்றுவது போல் உதயநிதி பேசி இருப்பது தமிழக அரசியலில், குறிப்பாக பாஜக என்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.