24 special

செந்தில் பாலாஜிக்கு என்னாப்பா.... தேவைப்பட்டால் பாஜகவுக்கு போய்டுவார்.. ஆனால் இங்க நம்ம தல தானே உருளுது.. புலம்பும் அமைச்சர்கள்!

Annamalai, senthil balaji
Annamalai, senthil balaji

அண்ணாமலையின் வாட்ச் குறித்து விவாதத்தை உண்டாக்கி இப்போது திமுகவை சேர்ந்த பல தலைவர்கள் ஆ. ராசா சொத்து சிக்கியது போல் நமது சொத்தும் சிக்குமோ என வாட்ச் மேன் போட்டு பாதுகாக்கும் சூழலுக்கு உள்ளாகி இருப்பது தான் தமிழக அரசியலில் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.


திமுக எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்துக்கு சொந்தமானது எனக் கூறி, கோவை மாவட்டத்தில் உள்ள 55 கோடி ரூபாய் மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. இதுதொடர்பான அமலாக்கத் துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமது முகநூல் பக்கத்தை பதிவிட்ட  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

தமிழக பாஜக வெளியிடவிருக்கும் திமுகவின் சொத்து குவிப்பு பட்டியல் மற்றும் ஊழல் பட்டியலுக்கு பிறகு இதுபோன்ற செய்திகள் தொடர்ச்சியாக வரும்' என்ற எச்சரிக்கையும் கொடுத்து இருந்தார் இந்த நிலையில் திமுகவை சேர்ந்த பல மூத்த அமைச்சர்கள் நிர்வாகிகள் தேவையில்லாத வேலையை இந்த செந்தில் பாலாஜி செய்து வருகிறார்.

மத்தியில் பாஜக அசுர பலத்தில் இருக்கிறது நம் கட்சியை சேர்ந்த பலர் மீது பல்வேறு புகார் நிலுவையில் இருக்கிறது இனி சிபிஐ அமலக்கத்துறையை வைத்து பாஜக ஆட்டத்தை ஆரம்பித்தால் பலருது முதலீடுகளே மூழ்கும் அபாயம் இருக்கிறது, அப்படி இருக்கையில் எந்த தைரியத்தில் செந்தில் பாலாஜி சவால் விட்டு இருக்கிறார்.

அவருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை அவர் மீது நடவடிக்கை எடுத்தால் அவரது அரசியல் வாரிசாக தம்பியை கொண்டு வந்து விடுவார் இல்லை என்றால் பாஜகவிற்கு கூட தாவி விடுவார் ஏற்கனவே பல கட்சிகள் தாவி வந்தவர்தானே செந்தில் பாலாஜி என வெளிப்படையாக திமுகவில் மட்டுமே தங்கள் வாழ்நாள் பயணத்தை கழித்து வரும் மிக மூத்த தலைவர்கள்.

இது ஒருபுறம் இருக்க தமிழக அரசியலில் அடுத்த அதிரடியாக மாவட்ட வாரியாக அமைச்சர்கள் தொகுதி வாரியாக சொத்து பட்டியலை பினாமி சொத்து விவரத்துடன் பாஜக வெளியிட இருக்கிறதாம் அப்படி பட்டியல் வெளியாகும் பட்சத்தில் 2ஜி ஊழல் என்ற முகம் எப்படி திமுகவிற்கு எதிராக அமைந்ததோ அதே போன்று அண்ணாமலை வெளியிட இருக்கும் பட்டியலும் தமிழக அரசியலில் புயலை கிளப்ப இருப்பதாக கூறப்படுகிறது.

அண்ணாமலையின் வாட்ச் விலையை கேட்டு இப்போது ஒவ்வொரு திமுக தலைவர்களையும் யார் சொத்து பட்டியல் வெளியாக போகிறதோ என்ற பதற்றத்தில் கவிழ்த்து போட்டு இருக்கிறதாம் செந்தில் பாலாஜியின் வாட்ச் அரசியல்.