24 special

உதயநிதியின் பேச்சால் ...!பெரும் சர்ச்சை வெடித்துள்ளது

Mk stalin, udhayanidhi stalin
Mk stalin, udhayanidhi stalin

முதன்முதலில் விஜய்யை வைத்து குருவி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளரானார் உதயநிதி ஸ்டாலின், பின்னர் ஒரு கல் ஒரு கண்ணாடி என்கின்ற படத்தின் மூலம் இயக்குனர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் கதையின் நாயகனாக முதலில் அறிமுகமானார். திரை உலகில் நடிக்க ஆரம்பித்து மக்கள் மத்தியில் முகங்களை பதியப்படுத்தி வந்த உதயநிதி ஸ்டாலின் 2018 ஆம் ஆண்டு முதல் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். பிறகு 2019 ஆம் ஆண்டு திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.


மேலும் கடந்த ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவியேற்று, முதல்வர் கலந்து கொள்ளும் பல்வேறு அரசியல் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். அதாவது 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இவர் போட்டியாளராக நிற்கப்பட்ட தொகுதி திமுகவின் அதிக செல்வாக்கையும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நின்று வென்ற தொகுதியாகும். அரசியலில் நுழைந்து கிட்டத்தட்ட நாலு வருடத்திற்குள்ளே சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். 

இந்த நிலையில் கடந்த வருடமே திரையுலகை விட்டு முழுவதுமாக வெளியேறுவதாகவும் தன்னை முழுவதுமாக அரசியலில் ஈடுபட வைத்துக் கொள்ளப் போவதாகவும் அறிவித்த உதயநிதி ஸ்டாலின் கமலஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலிருந்து விலகப் போவதாகவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்திருந்தார். ஆனாலும் அதற்குப் பிறகு மாமன்னன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தார், இந்த படமும் தற்போது வெளியாகப் போகிறது. இந்த நிலையில் மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'இனிமேல் நான் நடிக்க மாட்டேன் இதுவே எனது கடைசி படம், மூன்று வருடங்களுக்கு எனக்கு படம் கிடையாது' என்று உதயநிதி அறிவித்துள்ளார். 

அதாவது இசை வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின் 'இதுவே எனது கடைசி படமாக இருக்கும், இந்த கடைசி படத்திலும் மாரி செல்வராஜிடம் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நீங்கள் அடுத்த படம் செய்தால் அதனையும் நானே இயக்க வேண்டும் என்று மாரி செல்வராஜ் என்னிடம் கூறினார் ஆனால் அடுத்த மூன்று வருடத்திற்கு கண்டிப்பாக படம் நடிக்க முடியாது, அதற்குப் பிறகு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நான் கூறினேன்' என செய்தியாளர்கள் முன்பு உதயநிதி பதில் அளித்தது அவருக்கே பிரச்சனையாகி தற்போது சர்ச்சையாகி உள்ளது. 

அதாவது வழக்கம்போல் பேச்சு வழக்கில் உண்மையை உடைக்கும் உதயநிதி இந்த முறையும் மூன்று வருடங்கள் படம் நடிக்க முடியாது அதற்கு பிறகு மக்கள் முடிவு என்று கூறி திமுகவின் சரிவை அவர் கூறியுள்ளார் என விமர்சனங்கள் தற்போது எழுந்துள்ளது. அதாவது உதயநிதி நடிக்க மாட்டேன் என்றால், இனிமேல் நான் நடிக்க போவதில்லை என்று உதயநிதி கூறியதற்கு திரை உலகை விட்டு வெளியேறப் போவதாக தான் அர்த்தம் ஆனால் மூன்றாண்டுகளுக்கு  நடிக்க மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்!! அடுத்து வரப்போகும் மூன்று ஆண்டுகள் மட்டும்தான்  திமுக ஆட்சியில் இருக்குமா? அதன் பிறகு வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் தோற்றுவிடுமா? அதற்குப் பிறகு ஆட்சியை விட்டு வெளியே வந்து விடும் நான் நடிக்க துவங்குவேன் என உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக கூறியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர். 

இப்படி உதயநிதியே மூன்று வருடங்களுக்குப் பிறகு எப்படியும் எதிர் கட்சியாக மாறிவிடுவோம் என்கின்ற நினைத்து நான் மூன்று வருடங்களுக்கு நடிக்க மாட்டேன் அதன் பிறகு திமுக ஆட்சியை விட்டு விலகிய உடன் நடிக்க துவங்கவேன் என்று அர்த்தப்படும்படி கூறியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் உடன்பிறப்புகள் மத்தியில் கடும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.