24 special

ரெய்டால் திமுகவில் ஏற்பட்ட மாற்றம்...!மக்கள் மத்தியில் அதிர்ச்சி

Mk stalin,senthilbalaji
Mk stalin,senthilbalaji

திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முழக்கமிட்டு வந்தது. திமுகவின் முக்கிய தலைவர்களும் இதனை கூறி வந்தனர் இந்த நிலையில் திமுக ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகளாகியும் மதுவிலக்கை மட்டும் அல்ல இன்னும் சில தங்களது வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாமல் இருக்கிறது என பல்வேறு தரப்பிடமிருந்து போராட்டங்கள் அவ்வப்போது வெடித்த வண்ணமே உள்ளது. இதற்கிடையில் கடந்த வருடம் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தங்களது ஓர் ஆண்டு சாதனையை கொண்டாட  திமுக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கனிமொழி கலந்துகொண்டு உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என்று மாணவி ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு திமுகவின் வாக்குறுதியில் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என்று குறிப்பிடப்படவே இல்லையே என்று கனிமொழி பதிலளித்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


மேலும் ஆட்சி அமைப்பதற்கு முன்பு மதுவிலக்கு அமல்படுத்தபடும் என்று கதறிவந்த முதல்வர்  தற்போது மதுவிலக்கை பற்றி வாய் திறக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தும் வருகின்றனர். அதே நிலையில் திமுக ஆட்சியை கைப்பற்றியதற்கு பிறகு மது கடைகளில் எண்ணிக்கை குறைவதை தாண்டி அதற்கு எதிர்மாறாக அதிக எண்ணிக்கையில் மது கடைகள் திறக்கப்பட்டது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. ஈரோடு இடைத்தேர்தலின் போது கூட எங்கே தோற்று விடுவோமோ என்று பயந்து விரைவில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறினார்கள் ஆளுங்கட்சி தரப்பில்! ஆனால் அதைப் பற்றி தேர்தல் முடிந்த பிறகு கண்டு கொள்வதாக இல்லை. மேலும் மதுக்கடைகள் மூடுவது பற்றிய பேச்சை திமுக அரசு எடுத்துவராமல் இருந்தது. 

மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூட மது கடைகள் மூடப்படும் என்று அறிவிப்பை எங்குமே வெளியிடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே 26 ஆம் தேதி மதுவிலக்கு ஆயத்துறைத் தீர்வு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த வருமானவரித்துறையினரின் ரெய்டு எட்டு நாட்களாக தொடர்ந்தது.  இந்த ரெய்டில் 350 கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்தது மற்றும் பல ஆவணங்கள் சிக்கிய காரணத்தினால் தற்பொழுது மெல்ல மது கடைகள் மூடப்படும் என்று அறிவிப்புகளை வெளியிட தொடங்கியுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அதாவது தமிழ்நாட்டில் தற்போது 5329 மது கடைகள் இயங்கி வருவதாகவும் அதில் 500 கடைகள் குறைக்கப்படும் என சமீபத்தில்  அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். ஆதலால் இதற்கான பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது, இன்னும் ஒரு வாரத்திற்குள் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். 

அதாவது கள்ளச்சாராயம் விவகாரத்தில் பலர் பலியாகி, அரசு விற்பனை செய்த டாஸ்மாக்கிலும் இரண்டு உயிர்கள் பலியானது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் தனது தந்தை குடிப்பழக்கத்தை விட வேண்டும் என்பதற்காக 16 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் என இப்படி இத்தனை சோக நிகழ்வுகள் மதுக்களால் ஏற்பட்ட பிறகும் அமைதி காத்து வந்த திமுக,  எங்கு மதுவிலக்கு விவகாரத்தில் மக்கள் அதிருப்தி ஏற்பட்டால் பிறகு ஆட்சியை பிடிக்கவே முடியாது என்ற நிலை வந்த பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பது மக்கள் மத்தியில் திமுகவிற்கு மேலும் சரிவையே ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, 

இது மட்டுமல்லாமல் செந்தில்பாலாஜி அவர்களுக்கு நெருக்கமான இடங்களில் ரெய்டு நடந்த காரணத்தினாலேயே மது கடைகள் மூடப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார் என்று எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர்.