காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே பெரிய போராட்டமே நடந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளதால் கூட்டணி கட்சியான காங்கிரசை எதிர்த்து மேகதாது அணை கட்டும் விவகாரத்தில்முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்புவதற்கு தயங்கி வருகிறார் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு காவேரி பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு கடிதம் எழுதினார். இப்படி முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதை வைத்துதான் தற்போது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் பல ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்சனை இருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு இந்த ஆண்டுக்கு வர வேண்டிய நீர் வரத்து குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இதனை அடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாடு மக்களின் மீதும் விவசாயிகளின் மீதும் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருவதாக ஒரு பக்கம் பல கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன கர்நாடகாவில் இருந்து நீர் வரத்து குறைந்தால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது எனவே மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் சரியாக முடிவு எடுக்க வேண்டும் என்று பல மக்களும் எதிர்பார்த்து வரும் நிலையில் முதல்வர் கண்டுகொள்ளாமல் இருப்பது காவிரி டெல்டா பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினால் கர்நாடகத்தில் கட்டப்படும் மேகதாது அணைக்கு எதிராக சரியான முடிவு எடுக்க முடியாத நிலையில் அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கர்நாடக மாநிலத்தில் எந்த ஆட்சி அமைந்தாலும் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பதில் பிரச்சனை இருந்து தான் வருகிறது என்றும் இதற்கு நீதிமன்றங்கள் மூலம் எத்தனை உத்தரவு பிறப்பித்தாலும் கர்நாடக அரசு அதை மீறி செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியதுடன் கடந்த மாதம் கர்நாடகத்தில் இருந்து 41.6 டி எம் சி தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11.6 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டதால் காவிரி டெல்டா பகுதியில் உள்ள சாகுபடி பயிர்கள் சேதம் அடைந்தது உள்ளன எனவே கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு போதிய அளவு நீர் திறந்த விட கர்நாடகா அரசை வலியுறுத்துமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் கடிதம் குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பதிவில் இந்தியா என்ற கூட்டணியில் ஒருங்கிணைந்திருக்கும் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள் பிரதமர் மோடியை எதிர்ப்பதற்கும் தங்கள் கட்சியின் வம்சத்தை பெருக்குவதற்கு மட்டுமே ஒன்றினைவார்கள் என்ற நிலையில் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு முன் வருவதில்லை மேலும் தற்போது அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை தீர்த்துக் கொள்வதற்கு தான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார் என்றும் இந்த ஜோக்கர்களால் இவர்களுடைய பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை இவர்களெல்லாம் எப்படி மக்களின் பிரச்சனையை தீர்ப்பார்கள் என்று கடுமையாக சாடியுள்ளார்.
இவ்வாறு மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை குறிப்பிட்டு ஜோக்கர்கள் என்று குறிப்பிட்டதால் தற்போது திமுக உடன்பிறப்புகள் கொதிப்படைந்துள்ளனர்.