24 special

திமுகவிற்கு வரப்போகும் பேராபத்து...! குறிக்கப்பட்ட நாள்...!

mkstalin ,annamalai
mkstalin ,annamalai

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து தமிழகத்தில் மூன்று ஆண்டுகள் நடந்துவரும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் .மக்கள் மட்டுமல்லாது மற்றும் பல எதிர்க்கட்சி தலைவர்களும் ஏன் தேர்தல் வாக்குறுதியின் திட்டங்களை நிறைவேற்றவில்லை என கேள்விகளை எழுப்பி வரும் போது மறுபக்கம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்மன் என் மக்கள் என்ற தலைப்பில் நடை பயணத்தை மேற்கொண்டு திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை மக்களுக்கு வெளிச்சம் காட்டிக் கொண்டு வருகிறார் இதனால் திமுக மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ஆட்சியிலும் பின்னடவை இதுவரை இல்லாத அளவிற்கு சந்தித்துள்ளது.


திமுக ஆட்சியில் தேர்தலின் போது மக்களுக்கு அறிவித்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றாத நிலையில் தமிழக விவசாயிகள் சென்னையில் போராட்டங்களை மேற்கொள்ளப் போவதாக அறிவிப்பை வெளியிட்டது முதல்வர் தரப்பை கதி கலங்க செய்துள்ளது. தமிழ்நாடு ஒருங்கிணைப்பு குழு விவசாயிகளின் கூட்டம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் மதுரையில் நேற்று நடைபெற்றது மேலும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் பலரும் கலந்து கொண்ட நிலையில் அவர்களிடம் இருந்து நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகளை கேட்டு அறிந்து அவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்கு வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் கால வரையற்ற போராட்டம் நடத்தப் போவதாக முடிவு செய்தனர்.

டி ஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பி ஆர் பாண்டியன், ‘தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின் போது விவசாயிகளுக்கு அறிவித்த எந்த திட்டங்களையும் தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை என்றும் கரும்பு நெற்பயிர்கள்  போன்றவற்றிற்கு சரியான விலை நிர்ணயிக்காமல் லாபம் பார்க்க முடியாமல் இருந்து வருகின்றனர் அவர்கள் உரிய காலத்தில் பயிர் செய்வதற்கு ஏற்ற போதிய நீர் வசதி இல்லாமல் இருப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தமிழகத்தில் தற்போது வரை நடந்துள்ள திமுக ஆட்சியின் நிறைவேற்றப்படாத திட்டங்கள் ஒவ்வொன்றாக முன் வைத்தார்.

இது மட்டும் அல்லாமல் திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைத்த பி ஆர் பாண்டியன் தற்போது என்எல்சி கடலூரில் செய்துவரும் அட்டூழியங்கள் பற்றியும் அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அதனால் விவசாய மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றியும் தமிழக முதல்வர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்று குற்றம் சாட்டியதுடன் மேகதாது பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில் அதற்கும் எந்த தீர்வும் காண முடியாமல் திமுக அரசு இருப்பதாகவும் கூறினார். 

மேலும் விவசாயிகளின் கருத்துக்களை கேட்பதற்கு கூட கருத்துக்கணிப்பு கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறாத நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றுவது வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கிடையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப் போவதாக அறிவித்து அதற்காக அடிக்கல்லை மட்டும் நாட்டி விட்டு அதற்குப் பின் அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் தமிழக அரசு இருந்து வருவதை சுட்டிக்காட்டி பேசினார்

இவ்வாறாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் தமிழக விவசாயிகள் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் அதனை தடுப்பதற்கு திமுக அரசு சார்பில் மறுபக்கம் திட்டம் போட்டு வருவதாக சில தகவல்களை விவசாயிகள் கூறுகின்றனர். ஒரு வேலை இந்த போராட்டம் நடைபெற்று விட்டால் தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்ற பட்சத்தில் இந்த போராட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதற்கு திமுக நிர்வாகிகளுக்கு திமுக தலைமை அசைன்மென்ட் கொடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனாலும் என்ன நடந்தாலும் இந்த போராட்டத்தை நடத்தாமல் விடமாட்டோம் என விவசாயிகள் உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.