24 special

சுங்கச்சாவடி ஊழியர் மீது காரை ஏற்ற முயன்ற விசிக நிர்வாகிகள்!

mkstalin , thirumavalavan
mkstalin , thirumavalavan

வாக்குறுதி நிறைவேற்றாமை, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போக்குவரத்து உள்ளீர்கள் என அனைவரையும் போராட்டத்தில் ஈடுபட வைத்தது, திமுக அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகள், அமலாக்கத்துறையில் ரெய்டு, ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரொக்கங்கள், ஊழல் வழக்குகளால் அமைச்சர்கள் பதவி இழப்பு, சிறையில் இருக்கும் அமைச்சரையும் வெளிய எடுக்க முடியாமல் அவரின் ஆதரவாளர்களும் திமுகவின் மீது அதிருப்தி, மழை பாதிப்புகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அலட்சியம், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை காணாமல் இண்டி கூட்டணிக்கு சென்ற முதல்வர், தன் தவறை மறைக்க மத்திய அரசின் மீது பழி போடும் திராவிட மாடல், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் ஒவ்வொரு அரசு கட்டிடங்களுக்கும் தனது தந்தையின் பெயரை வைத்தல், என மக்கள் திமுக மீது இத்தனை அதிருப்திகளையும் சுமந்து கொண்டு உள்ளனர்.


மேலும் இவர்கள் அனைவரும் ஓட்டுக்காக மீண்டும் தொகுதி பக்கம் வரட்டும் அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன் என மக்கள் ஒவ்வொருவரும் திமுக மீது கொந்தளிப்புடன் இருப்பதும் ஆளும் அரசிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திமுக தன் கூட்டணி கட்சிகளை தக்க வைக்கும் வேளையிலும் தொகுதி குறித்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புகள் மார்ச் தொடக்கத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் திமுகவின் முக்கிய கூட்டணி கட்சியாக உள்ள விடுதலை சிறுத்தைகள் திமுகவிடம் நாடாளுமன்ற தேர்தலில் நான்கு தொகுதிகளை கேட்டுள்ளது அதாவது மூன்று பொதுத் தொகுதியையும் ஒரு தனி தொகுதியையும் திமுக விடம் நாங்கள் கேட்டுள்ளோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார், திமுகவின் பதில் இன்னும் வரவில்லை என்றும் எங்களது கோரிக்கைகளிலிருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை என்றும் கூறியுள்ளார். 

ஏற்கனவே திமுகவின் கூட்டணி கட்சிகள் இரண்டு திமுகவை விட்டு பிரிந்து சென்றது இதனால் விடுதலை சிறுத்தைகளையும் பிரிய விடக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவாலய தலைமை ஒரு பக்கம் சிந்தித்து வருகிற நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளால் திமுகவிற்கு மேலும் அதிருப்திகள் ஏற்பட்டு வருகிறது. அதாவது விடுதலை சிறுத்தைகளின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருந்த ஒரு பிரபலத்தின் மீது வெளிநாட்டு இந்திய பெண் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னிடம் லட்சக்கணக்கான பணங்களையும் பொருட்களையும் பெற்று தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும் அப்பெண் முறையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாடியதும் ஆளும் தரப்பை கோபப்படுத்தியது. ஏற்கனவே இருக்கும் பிரச்சனை பத்தாது என்று நீங்கள் வேறு புதிய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறீர்கள் என விடுதலை சிறுத்தைகளை  திமுக தலைமை கடிந்து கொண்டதாகவும் கூறப்பட்டது. 

 இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதனை அடுத்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் காரில் சென்ற போது கட்டண விலக்கு கேட்டுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்து சுங்கச்சாவடி ஊழியர் மீது விசிக நிர்வாகிகள் காரை ஏற்றிய சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே திமுக கடும் அதிருப்திகளை சந்தித்து வருகிறது இதற்கிடையில் தன் கூட்டணியை தக்க வைக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் கேட்பதை கொடுக்கலாம் என்று நினைத்த திமுக தலைமைக்கு மேலும் பிரச்சனையையும் கூட்டணி அதிருப்தியை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் விடுதலை சிறுத்தைகள் ஈடுபடுவதால் திமுக விடுதலை சிறுத்தைகள் முன்வைத்த தொகுதியை கொடுக்க வேண்டுமா என்ற கோணத்தில் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.