![Stalin, Vijay, Eps](https://www.tnnews24air.com/storage/gallery/4lmmSHYojt5tqvDGSDqhfbY9nOvm0XNiasd3qzVf.jpg)
நடிகர் விஜய் கட்சி தொடங்கி பல்வேறு ஆலோசனைகளை தனது நிர்வாகிகளுக்கு உத்தரவை பிறப்பித்து வருகிறார். நிர்வாகிகளும் கட்டளைகளை ஏற்று அதற்கான வேலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் மதுரையில் களமிறங்குவதாக சில தகவல் வந்துள்ளதால் தென் மாவட்டத்தில் உள்ள ரசிகர்கள் குஷியில் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தின் முன்ணனி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகளுக்கு இணையாக அவர்கள் செய்யாததை செய்ய திட்டமிட்டுள்ளார் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய்.
நடிகர் விஜயின் அரசியல் கனவு யாருக்கும் ரகசியமானது எல்லாம் இல்லை. பல ஆண்டுகளாக திட்டம் போட்டு செயல்பட்டு வந்தது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. சினிமாவில் பிசியாக இருந்தாலும் அரசியலுக்கு வருவது தொடர்பான வேலைகளையும் ஒரு பக்கம் ஆலோசித்து வந்தார். இந்நிலையில் கட்சியின் பெயரை அறிவித்த விஜய் வரும் லோக்சபா தேர்தலில் போட்டி இல்லை என்று விஜய் அறிவித்துள்ள நிலையில், சட்டசபைத் தேர்தலில் தான் அவரது கட்சி களமிறங்க உள்ளது. இதற்கிடையே விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளர்கள் நியமனம் விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது. லோக்சபா தேர்தலிலும் யாருடனும் கூட்டணி என்பது கிடையாது என கூறினார்.
விஜயின் மக்கள் நற்பணி மன்றத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களே தொடர்ந்து பொறுப்பு கொடுக்கப்படும் என விஜய் தரப்பில் கூறப்பட்டது. சாதி, மதம் இன்றி அனைவருக்கும் பொறுப்பு கொடுக்கப்படும் என சில தகவல் வந்தன. மிழ்நாடு முழுக்க மிக விரைவில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை நடக்க உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளின் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், புஸ்ஸீ ஆனந்த் மாநிலம் முழுவதும் சுமார் இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கட்டளையிட்டார். ஏற்கனவே அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் இரண்டு கோடி உறுப்பினர்கள் வைத்துள்ளனர். அதையெல்லாம் நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் விஜய் உத்தரவை செய்து வருகிறார்களாம். இது ஒரு பக்கம் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.
இந்தநிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டை வரும் ஏப்ரல் மாதம் மதுரையில் நடந்த திட்டமிட்டுள்ளாராம். அதற்கு முன்பாக 234 சட்டமன்ற தொகுத்திக்கொண்ட தமிழகத்தில் கட்சி ரீதியாக 100 மாவட்டமாக பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்கவும் விஜய் முடிவெடுத்துள்ளாராம். இது தொடர்பாக விஜய் வரும் நாட்களில் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. முன்னனி காட்சிகளாக உள்ள திமுக 72 மாவட்ட பொறுப்பாளர்களையும், அதிமுக 82 மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ள நிலையில், விஜய் 100 மாவட்ட பொறுப்பாளர்களை நியமிக்க திட்டம் போட்டுள்ளது இரு முக்கிய கட்சிகளுக்கும் பெரும் நெருக்கடி கொடுத்துள்ளார். முன்தாகஸ் அரசியல் விமர்சர்கள் விஜய் கட்சி தொடங்கியதற்கு லெட்டர் பேட் மூலம் அறிவித்தது என்பது எடுபடாத அரசியல் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் உள்ள மாநாட்டை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ள அவர்களுக்கு தேவியான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட தலைவர்கள் பொறுப்பு கொடுக்கப்பட்டு மிக சிறப்பாக நடத்தி முடிக்க திட்டம் போடுவதாக கூறப்படுகிறது முன்னதாக திருச்சியில் மாநாடு நடத்தப்படும் என தகவல் வந்த நிலையில் தென் மாவட்டத்தை நோக்கி விஜய் பயணம் தொடங்குவார் என அரசியல் விமர்சகர்களால் கூறப்டுகிறது.