சினிமா துறையில் சக மனிதர்களை மதித்து நடப்பதில் விஜயகாந்தை போல ஒரு மனிதரை பார்க்கவே முடியாது. அவர் இறந்து இரண்டு வாரம் ஆகியும் அவரை மக்கள் மறக்காமல் இன்று வரையும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சினிமா துறையிலும் அரசியல் வாழ்க்கையிலும் மக்களுக்கு சேவை செய்தது ஒரு படி மேலே என்று சொல்லலாம். அது தான் இதுநாள் வரை அவரது பெயரில் மக்களும் இலவச உணவு கொடுத்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் அனைவருக்கும் மரியாதை கொடுத்து அரவாணிபவர் கேப்டன் விஜயகாந்த், அதிலும் மூத்த நடிகர்களுக்கு பாரபட்சம் எல்லாம் அவரிடம் இருக்காது. ரஜினி, கமலும் அவருக்கு போட்டி நடிகர்கள் என்றாலும் மரியாதையுடன் அவர்களை ‘அண்ணன்’ என்றே அழைப்பார். தன்னுடைய படப்பிடிப்பில் யாரும் அவமானப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இதுவரை விஜயகாந்த் மூலம் நான் கஷ்டப்பட்டேன் என ஒரு நடிகரும் இதுநாள் வரை சொல்லியது கிடையது. அதற்கு உதாரணமே வடிவேலு எவ்ளோ கஷ்டத்தில் இருந்தாரோ அவரை சின்னக்கவுண்டர் படம் மூலம் அறிமுகமானார். வடிவேலு பல முறை மேடையிலும் சினிமாவிலும் விஜயகாந்த் குறித்து விமர்சித்துள்ளார். ஆனால், விஜயகாந்தோ அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏதும் செய்ததில்லை.
அந்த வகையில் விஜயகாந்த் மறைவிற்கு கூட வரமுடியாமல் ஓரம் கட்டிய வடிவேல் மீது விமர்சனம் இன்று வரை ஓயவில்லை. வடிவேலு நண்பர் ஒருவர் வடிவேலு குறித்து பேசினார் அதாவது ஒரு நாள் முழுக்க உணவு உட்கொள்ளவில்லை எனவும் ஒரு நாள் நினைவிடத்தில் வடிவேல் சென்று அஞ்சலி செலுத்துவார் என கூறினார். ஆனாலும், ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்வதை நிறுத்தவில்லை.
இந்நிலையில், இன்று தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு கமல், ரஜினிகாந்த், பாக்யராஜ், நம்பியார், வடிவேல் மற்றும் பல கலைஞர்களின் வேடம் அணிந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர்கள் மட்டுமின்றி மறைந்த அரசியல் தலைவர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், பெரியார் மற்றும் தற்போது உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் போன்ற வேடமணிந்து விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய கலைஞர்கள். இது மட்டுமில்லாமல் விஜயகாந்த் போன்று 10க்கும் மேற்பட்டவர் வடம் அணிந்தது அங்குள்ள மக்களை கண்கலங்க செய்துள்ளனர்.
அனைத்து கலைஞர்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் பூக்கள் தூவி அந்த அதன் தலைவர்களுக்கு ஏற்றாற்போல் மரியாதை செலுத்தினர். வரும் 19ம் தேதி ஒட்டுமொத்த சினிமா துறையும் சேர்ந்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அன்று நடிங்கர் வடிவேல் நேரில் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மறைவிற்கு வரதஹ நடிகர்கள் தற்போது நேரில் வந்து அஞ்சலை செலுத்தியும் அவர்களது குடும்பத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று நடந்த அஞ்சலி செலுத்திய காணொளி வீடியோ இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் கருணாநிதி இருக்காப்ல பர்ஸ் பத்திரம் என நகைச்சுவையாக கமெண்ட் செய்தும், அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களை கண்டு மக்கள் புகைப்படம் எடுத்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.