எங்கே நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்தால் தனக்கு பின்னடைவாக வரும் என விஜய்க்கு திமுக அரசு அனுமதி மறுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கும் விஜய், அவர்களை தன்னுடைய கட்சி தொண்டர்களாக மாற்றும் வேலைகளை படிப்படியாக தொடங்கியுள்ளார். தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி செயல்படுத்தி வருகிறார் விஜய் இதன் பின்னணியில் அரசியல் ஈடுபாடு எண்ணம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இதற்காக தமிழகத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர் மன்றத்தை தற்போது விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அரசியல் ஈடுபாட்டில் செயல்படுத்தி வருகிறார், அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். அதற்காக வேலைகளை சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் விஜய் மக்கள் இயக்கத்தினர் மூலம் கச்சிதமாக செய்து வருகிறார் விஜய்.
இந்த நிலையில் அம்பெத்கர் பிறந்தநாளை தனது முதல் அரசியல் பிரவேச நிகழ்வாக விழா நடத்த விஜய் திட்டமிட்டிருந்தார். இதன் பின்னணியில் மக்கள் இயக்கத்தின் முதல் அரசியல் நிகழ்ச்சி ஒரு அரசியல் வரலாற்று தலைவரை கொண்டாடும் வகையில் இருக்க வேண்டும் என விஜய் தரப்பு திட்டமிட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
இதற்காக தனது நிர்வாகிகளுக்கு மறைமுக உத்தரவை பிறப்பித்து இருந்தார் விஜய். விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட உத்தரவில் அம்பெத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிக்க வேண்டும் எனவும், அனைத்து மாவட்டங்களிலும் அம்பெத்கர் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் எனவும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி மற்றும் விஜய் படத்தினை பயன்படுத்தி அம்பெத்கர் பிறந்தநாளை விஜய் மக்கள் இயக்கம் கொண்டாடுவதை மக்கள் பார்க்க வேண்டும் என விஜய் தரப்பு பெரிதும் திட்டமிட்டு செயல்படுத்த அதிக முனைப்பு காட்டியது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் அம்பெத்கர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கி சில இடங்களில் ஏழை எளியவர்களுக்கு உணவுகளை கூட வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். இன்னும் சில இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய் படம் மற்றும் கொடியை பயன்படுத்தி ஊர்வலமும் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் இதனை உளவுத்துறையின் மூலம் கண்டறிந்த திமுக அரசு விஜய் மக்கள் இயக்கத்தின் அம்பெத்கர் கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்காமல் இழுத்து அடித்துள்ளது.
கடந்த 12ம் தேதியே தமிழகத்தின் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அம்பெத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்த, போலீஸ் அனுமதி கேட்டு, மனு கொடுத்துள்ளனர். சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, உடனே அனுமதி வழங்காமல், 'நாளை வாருங்கள், பார்க்கலாம்' என, போலீசார் பிடி கொடுக்காமல் பேசி அனுப்பி வைத்துள்ளனர். சில மாவட்டங்களில், தாங்கள் சொல்லும் நேரத்தில் தான் மாலை அணிவிக்க வேண்டும் என, நிபந்தனை விதித்துள்ளனர்.
வட மாவட்டங்களில், ஆளும் கட்சி அமைச்சர்கள், மாவட்டச் செயலர்களின் வாய்மொழி உத்தரவை தொடர்ந்து, அனுமதி தராமல் இழுத்தடித்துள்ளனர். இந்த சூழலில், சென்னையில் இன்று, புஸ்ஸி ஆனந்த் தலைமையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், வாகனங்களில் ஊர்வலமாக செல்ல திட்டமிட்டிருந்தனர் இதற்கும் காவல்துறை தரப்பில் அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர், தலித் சமுதாய ஆதரவை பெறும் நோக்கில், அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாட முன்வந்துள்ளனர் எனவும் அதன் காரணமாக ஆளும் திமுக தரப்பு முட்டுக்கட்டை போடப்படுவதாக, விஜய் மக்கள் இயக்கத்தினர் குமுறுகின்றனர்.
இதனால் விஜய் கடும் கோபத்தில் உள்ளார். உளவுத்துறையின் மூலம் விஜய் அரசியல் பிரதேசத்தை தெரிந்து கொண்டு இப்படி திமுக அரசு நடவடிக்கை எடுத்தது நடிகர் விஜய்யை உச்சகட்ட கோபத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மேலும் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்றும் எந்தவிதமாக அரசியலில் தனது அடியை எடுத்து வைக்கலாம் என விஜய் தரப்பு தற்போது தீவிரமாக ஆலோசித்து. வருகிறது இதற்கெல்லாம் பின்னணியில் எங்கே விஜய் வளர்ந்து அரசில் இயக்கமாக மாறிவிட்டால் உதயநிதிக்கு எதிராக திரும்பலாம் எனவும் அந்த அரசியல் பிரவேசம் உதயநிதிக்கு எதிராக வெடிக்குமோ என்றெல்லாம் யோசித்து தற்போது திமுக காய்களை நகர்த்தி விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு முற்றுகை போட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.