24 special

உதயநிதிக்கு உதவ போய் வம்பை விலைக்கு வாங்கி கொண்ட வைரமுத்து....!

udayanithi, vairamuthu
udayanithi, vairamuthu

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, சனாதன தர்மம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். இவரது பேச்சு தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு பல்வேறு அமைப்புகளும் ஏன், கூட்டணி அமைத்துவரும் i.n.d.i.a வில் உள்ள கட்சிகளுமே கூட கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அவர் மீது புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து, உதயநிதியின் வெறுப்பு பேச்சிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ட்வீட் ஒன்றை செய்து, கடும் சிக்கலில் மாட்டியுள்ளார். அப்படி என்ன ட்வீட் போட்டார் அவர்.?


சனாதனம் என்பதும்சனாதன எதிர்ப்பு என்பதும்காலங்காலமான கருத்துருவங்கள்பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டுஎன்பது சனாதனக் கருத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சனாதன எதிர்ப்புதிருக்குறளைத்தான்உதயநிதி பேசியிருக்கிறார்திருவள்ளுவரைக் கொண்டாடுகிறவர்கள் திருக்குறள் பேசியஉதயநிதியை மட்டும்எதிர்ப்பது ஏன்?அரசியல் என்று கூறியிருந்தார்.இவர் ட்வீட் போட்டதும் போதும், பின்னூட்டத்தில் வெளுத்தெடுக்க தொடங்கினர் நெட்டிசன்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். இதற்கான கலைஞர் கொடுத்த விளக்கம்- பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும். இதை சனாதன எதிர்ப்பாக சொல்கிறீர்களா !? விளங்கவில்லை என முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதி குரல் விளக்கத்தை காட்டி ரவுண்டு கட்டுகின்றனர்.

திருக்குறள் 2 அடி, 7 வார்த்தை. 3 வார்த்தைய மட்டும் போட்டா  மிச்சத்த உங்க தலைவர் கருணாநிதி வந்து சொல்வாரா? என அவரையும் வம்பில் சிக்க வைத்துள்ளார் வைரமுத்து.மூன்று வார்த்தை தாண்டி இந்த திராவிட கும்பல் ஏன் வருவதில்லை. அதுதான் அரசியல் என்றும் சிலர் தாக்கியுள்ளனர்.இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் அந்த மாநில அரசை கலைக்கனும்ன்னு சொல்லக்கூடிய திமுக, தமிழ்நாட்டுல சின்மயி மாதிரி நிறைய பெண்கள் உங்கள் மேல்  புகார் கொடுத்தும் உங்களை கைது செய்து ஜெயிலில் போடாதது ஏன்? அரசியல். என சிலர் கிண்டலடித்துள்ளனர்.இது இப்படி இருக்க mee too அமைப்பின் மூலம் பாடகி சின்மயி வைரமுத்துமீது பாலியல் புகார் கூறியிருந்தது குறித்து நெட்டிசன்கள் கேள்விக்கனைகளை தொடுத்து வருகின்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சின்மயியை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து மீது மேலும் சில புகார்கள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறிய தான்தான் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் செய்தவர்கள் கம்பீரமாக வலம் வருவதாகவும் கூறி வந்தார் சின்மயி கூறியதை பலரும் மேற்கோள் காட்டி வருகின்றனர்.வைரமுத்து மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சின்மயி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்ற கேள்வியையும் கேட்க தொடங்கியுள்ளனர்.உதயநிதிக்கு ஆதரவாக ட்வீட் செய்யப் போய்,  வைரமுத்து சின்மயி இடையேயான பாலியல் புகார் விவாகரம் மீண்டும் சூடுபிடித்து விட்டது. இந்நிலையில் மேலும் ஒரு பின்னணி பாடகியான புவனா சேஷன் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் பற்றிய விஷயங்களும் வெளிவரத் தொடங்கிவிட்டன. கவிஞர் வைரமுத்து 1998 ஆம் ஆண்டு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ள புவனா சேஷன், தன்னிடம் இணக்கமாக நடந்து கொண்டால் சினிமாவில் பெரிய ஆளாக கொண்டு வருகிறேன் என கூறியதாகவும் தெரிவித்தார்.

வைரமுத்து மீதான புவனா சேஷனின் இந்த குற்றச்சாட்டுக்கள் தமிழ் சினிமா வட்டாரத்திலும் தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது."17 பெண்கள் வைரமுத்திற்கு எதிராக பாலியல் குற்றசாட்டை முன் வைத்திருக்கின்றனர். ஆனால் 4 பேர் மட்டும்தான் தைரியமாக தங்களது பெயரையும் முகத்தையும் வெளி உலகத்திற்கு காட்டியுள்ளனர். பாலியல் வன்கொடுமை சூழ்நிலையில் இருந்து வெளியே வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று. என்னுடைய கதையை நான் பகிர்வதற்கான நோக்கம் இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எனக்கு நேர்ந்ததை போல பிற பெண்களுக்கு நடக்க நான் விரும்பவில்லை. என்று கூறிய உவனா சேஷனுக்கு என்ன பதில் என்று சொல்லுங்கள் என வைரமுத்துவை வறுத்து எடுக்க தொடங்கிவிட்டனர் சமூக வலைத்தளவாசிகள்.

கட்சி விஸ்வாசத்தில் உதயநிதிக்கு ஆதரவு தந்து எதேனும் ஆதாயம் அடையாளம் என்று ஒரு ட்வீட் போட்டால், பழைய சம்பவத்தையெல்லாம், கிண்டிக் கிளறி அடிக்கிறாங்களே என வைரமுத்து புலம்பி வருவதாக தெரிய வருகிறது. பெண்வழிச்சேறல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்பெண்சேர்ந்தாம் பேதைமை இல். அந்தக் குரளிற்கு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எழுதிய உரை, சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக் கொண்டு கிடக்க மாட்டார்கள் என்பதுதான்.  திருக்குறளை அரைகுறையாக மேற்கோள் காட்டும் வைரமுத்துவுக்கு இந்த குறளும் அதற்கு அவர்கள் தலைவர் எழுதிய உரையும் புரியுமா என பலரும் கேட்க விழி பிதுங்கி நிற்கிறாராம் பாவம்.