24 special

போராட்டத்தில் இறங்கிய வைணவர்கள்! அறிவாலயத்துக்கு ஆட்டமே முடியப்போகுதாமே...

Mk stalin
Mk stalin

திருச்சி மாவட்டம் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படுகிறது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவில் இந்தியாவிலேயே அதிக பரப்பளவைக் கொண்ட கோவிலாகவும் ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய பெருமாள் கோவிலாகவும் புகழப்படுகிறது. இப்படி மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலை காண்பதற்கும் ரங்கநாதரை தரிசிப்பதற்கும் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்திற்கு வருகை தந்து செல்வார்கள் அப்படி அவர்கள் வரும்பொழுது கோவிலுக்கு உள்ளே நுழையும் பொழுது கொடிமரம் முன்பாக அமைந்திருக்கும் அனுமன் சிலையை வணங்கிவிட்டு தான் ரங்கநாதரை வழிபட உள்ளே செல்வார்கள். இந்த பழக்கமானது பல ஆண்டுகளாக பக்தர்களிடம் இருந்து வந்தது மேலும் காலம் காலமாக அனுமன் சிலையும் அதே கொடி மரத்தின் முன்பு தான் இருந்து வந்துள்ளது. 


ஆனால் கடந்த கொரோனா காலத்தில் சுமார் நான்கு அடிக்கு அனுமன் சிலையை கொடி மரத்திலிருந்து தள்ளி வைத்ததாக அக்கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் தற்பொழுது மீண்டும் அதே இடத்தில் அனுமன் சிலையை வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு அவ்வப்போது கோரிக்கைகளை விடுத்து வந்துள்ளனர். அதோடு ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி மூலவர் திருவடியை பராமரிப்பு என்று பெயரில் சிதிலம் செய்துள்ளனர் என்றும் அவற்றை பழையபடி சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ளனர். ஆனால் பக்தர்களின் கோரிக்கைகளை கோயில் நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாமல் இருந்து வந்துள்ளது. இப்படி தொடர் கோரிக்கைகளை பக்தர்கள் முன்வைத்து வர அதற்கு கோவில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,. விருதுநகர் மற்றும் திருச்சி போன்ற பகுதிகளில் இருந்து வந்த 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலின் ஆரியபட்டாள் வாசலில் உள்ளே தங்கக் கொடி மரம் முன்பு ஜால்ரா வாசித்தும் பஜனைப்பாடியும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், கருவறைக்கு காவலாக இருந்த கம்பத்தடி அனுமன் சிலையை 2015 ஆம் ஆண்டில் நகர்த்தி பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த திருக்கோவில் வரலாற்றில் பிரிக்க முடியாத வகையில் அரங்கமும் அயோத்தியும் அனுமனுடைய காவல் என்கின்ற சம்பிரதாயத்திலிருந்து கம்பத்தடி அனுமனுடைய பார்வையில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது. இது புராண காலத்தில், கம்பத்தடி முன்பு நிறுவப்பட்டது அனுமன் சிலை! ஆனால் தற்போது திருவரங்கத்தின் காவல் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனால்தான் பெருமாளின் திருவடிகள் உடைக்கப்பட்டு திருவடிகள் மாற்றப்பட்டும் தற்பொழுது திருக்கோவிலில் அனர்த்தமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு தமிழகம் முழுவதும் திருமால் அடியார்கள் மூன்றாண்டு காலமாக போராடி பல நடவடிக்கைகளில் ஈடுபட்டும் கோவில் நிர்வாகம் எங்களுக்கு இசைவது போன்ற ஒரு ஒப்புதலை வழங்கினார்கள், ஆனால் எங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது, அதனால் தற்பொழுது இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 

எங்கள் கோரிக்கையை நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்றும் நாங்கள் அடியார்கள் நாங்கள் ஏன் இந்த விவகாரத்திற்கு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் கோவில் நிர்வாகமே அனுமன் சிலையை சற்று தள்ளி வைத்திருப்பதை ஒத்திருக்கிறது அதனால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அவர்கள் செல்லட்டும் நாங்கள் எங்கள் வழியில் போராட்டத்தை மேற்கொள்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட திருமால் அடியார் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசு இந்து சமய விரோதத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் இந்து சமய மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைணவர்கள் முன் வைத்திருப்பது திமுகவிற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.