Tamilnadu

தொப்பி இருக்கலாம் ... தொப்ப இருக்க கூடாது....

tamilisai , police
tamilisai , police

போலீசாரிடம் தொப்பி இருக்கலாம் ஆனால்  தொப்பை இருக்கக்கூடாது என்றும், போலீசார் ஃபிட்டாக இருக்க வேண்டும் என புதுச்சேரி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசைஎதுகை மோனை கலந்த அன்பு கன்டிஷன் போட்டு பேசிய விஷயங்கள் தான் தற்போது  அனைவரையும் ரசிக்க வைத்ததோடு மட்டுமின்றி சிந்திக்கவும் வைத்துள்ளது.


புதுச்சேரி காவல்துறையில் 10 முதல் 25 ஆண்டுகள் பணி முடித்த காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு 10 ஆண்டு பணிப்புரிந்தவர்களுக்கு தலைமை காவலர் பதவியும், 15 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களுக்கு  துணை உதவி ஆய்வளர் பதவியும், 25 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களுக்கு உதவி ஆய்வாளர்களாகவும் என சுமார்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட   பதவி உயர்வு பெற்ற காவல் துறையினருக்கு அடையாளச் சின்னங்கள் அணிவித்து‌   துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் கௌரவித்தார்.

விருது  வழங்கும் விழா மட்டுமின்றி  புதுச்சேரியின் அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் அவர் தொடங்கி வைத்தார். போன்ற நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்து பின்னர் விழா மேடையில் பேசிய அவர்,   சமுதாயத்தை கண்டித்து வளர்ப்பதை விட கண்காணித்து வளர்க்க வேண்டும் என்றும், அது காவல்துறை அலுவலகத்துக்கும், காவல் நிலையத்துக்கும் பொருந்தும்  என தெரிவித்தார். 

மேலும், சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய  தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரி மட்டுமின்றி இனி எந்த பகுதிகளிலும் இதுபோன்ற தொரு சம்பவம் நடக்காதவாறு காவல்துறையினர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்  என தெரிவித்தார்.,  ஆண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் குழந்தைகளை எந்த இடத்தில் அரவணைப்பு வேண்டுமோ அந்த நேரத்தில் அரவணைப்பும், எந்த நேரத்தில் கண்டிஷன் போட வேண்டுமோ அந்த இடத்தில் கண்டிஷனாகவும் எல்லா நேரத்தில் கண்காணிப்பு முக்கியம் என பெற்றோர்களுக்கு காட்டமாக அறிவுரை வழங்கினார். 

தொடர்ந்த பேசிய அவர், போலீசாரிடம் தொப்பி இருக்கலாம் தொப்பை இருக்கக்கூடாது என்றும், தொப்பை அதிகரிக்க அதிகரிக்க வாழ்நாள் குறையும். எனவே, போலீசார் ஃபிட்டாக இருக்க வேண்டும். என கலகலப்புடனும் சிந்திக்க கூடிய வகையிலும் பேசினார்.