சமீப காலமாக அதுவும் குறிப்பாக கடந்த 15 நாட்களாக பாஜகவினர் மீது தொடர்ந்து வழக்குகள் தொடுக்கப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அதிகமாகிறது என பாஜகவில் இருந்து தற்போது கடும் கண்டன குரல்கள் எழுந்துள்ளது. கடந்த வாரம் பாஜகவின் மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா மீது வழக்கு தொடரப்பட்டு நள்ளிரவில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். எஸ் ஜி சூர்யா தன் சுமத்தப்பட்ட வழக்கு முடிவடைவதற்குள் ஜாமீனில் இருக்கும் அவர் மீது மேலும் மற்றொரு வழக்கு தொடரப்பட்டது. எஸ் ஜி சூர்யாவின் கைதிற்கு முன்பு பாஜகவை சேர்ந்த கட்டெறும்பு எனும் இசக்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுக்காக கைது செய்யப்பட்டார். பிறகு ஆர் எஸ் எஸ் பிரமுகர் சரவண பிரசாத் மீதும் பொய்யான செய்தி பரப்பப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது மேலும் கன்னியாகுமரியைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர் செந்தில்குமாரும் கைதானார்கள்.
இவர்களைத் தொடர்ந்து மூன்று பாஜக நிர்வாகிகளையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த வரிசையில் பாஜகவின் ஆதரவாளராக உள்ள உமா கார்க்கியும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது, அதாவது தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடமிருந்து சிறந்த சமூக வலைதள நிர்வாகி என்ற விருதை உமா கார்க்கி கைது செய்யப்படுவதற்கு முந்தைய தினம் தான் பெற்றிருந்தார், ஆனால் மறுநாளே கைது செய்யப்பட்டார்!
இந்த நிலையில் தற்போது பாஜகவின் முக்கிய பெண் தலைவராக உள்ள வானதி சீனிவாசனை குறி வைத்து திமுக இறங்கியுள்ளதாக தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று கோவை காந்திபுரத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட மத்திய அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் கோவை தெற்கு தொகுதி எம் எல் ஏ வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன்.
அந்த பொதுக்கூட்டத்தில் வானதி சீனிவாசன் திமுக எம்எல்ஏக்கள் பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுப்பட்டு, கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் திமுகவினர் புகார் அளித்து வருகின்றனர். அதாவது பொள்ளாச்சி காவல் நிலையம், கோவை ரேஸ் கோர்ஸ், காந்திபுரம், சாய்பாபா காலனி என்று மாநிலங்களில் உள்ள 17 போலீஸ் நிலையங்களிலும் திமுகவினர் தனித்தனியாக புகார் அளித்துள்ளனர். மேலும் சூலூர் போலீஸ் நிலையத்திலும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து தெற்கு மாவட்ட பகுதியில் மட்டும் வானதி சீனிவாசனுக்கு எதிராக 20 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதற்கெல்லாம் பின்னணியில், ஏற்கனவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது போல் என் மண் என் மக்கள் பாத யாத்திரைக்கு பாஜகவினர் ஆர்வமுடன் இருந்து வருவதால் அவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் திமுக இந்த மாதிரியான கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாக பாஜக தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இப்படி பாஜகவின் ஒவ்வொரு முக்கிய நிர்வாகியையும் ஏதாவது ஒரு காரணம் கூறி சிறையில் அடைத்து விடுவோம் பிறகு எப்படி அவர்கள் திமுகவின் சொத்து பட்டியல் இரண்டாம் பாகம் மற்றும் பாதையாத்திரையை திறம்பட நடத்தி முடிப்பார்கள் என்று பார்க்கலாம் என அறிவாலய தரப்பில் பேசப்பட்ட வருவதாகவும் பாஜக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது..