24 special

சரத்பவார் நிலைமையை நினைத்து தெறித்து ஓடும் எதிர்க்கட்சிகள் ...!அம்போவென நிற்கும் காங்கிரஸ்..!

Sarath pawar,
Sarath pawar,

மகாராஷ்டிராவில் பலம் வாய்ந்த கட்சியாக திகழும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போது இரண்டாக பிரிந்துள்ளது, இந்த கட்சியின் தலைவரான சரத் பவானரின் அண்ணன் மகன் அஜித் பவர் இந்த கட்சியை இரண்டாக உடைத்து 40 எம்.எல்.ஏகளுடன்  பாஜகவில் இணைத்துள்ளார். மேலும் பாஜக கூட்டணியில்  சேர்ந்த அவருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கியுள்ளனர்.


கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வரும் 2024 தேர்தலில் ஒன்றாக போட்டியிடலாம் என யோசித்து வந்த நிலையில் அண்மையில் பீகாரில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தினர். மேலும் காங்கிரஸ் உடன் இணைந்து 19 எதிர்க்கட்சிகள் தேர்தலில் பாஜகவை எதிர்க்க உள்ளதாக கூறி பாட்னாவில் கூட்டத்தையும் நடத்தினர். இந்த கூட்டத்தில் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மல்லி கார்ஜுன கார்கே, மற்றும் ராகுல் காந்தி தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரவால் திமுக சார்பில் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் டிஆர்பி பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர், சிவசேனா  சார்பில் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் என்ன கிட்டத்தட்ட 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆறு மாநில முதல் மந்திரிகள் இந்த எதிர்க்கட்சி மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் இரண்டாவது கூட்டத்தை விரைவில் கூட்டலாம் என முடிவும் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த கட்சிப் பிளவு பட்டுள்ளது. இதன் காரணமாக பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பு முயற்சி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக சிவசேனா கட்சியுடன் 25 ஆண்டுகளாக கூட்டணி வைத்தும் மற்றும் பீகாரில் நித்திஷ் குமார் அவர்கள் தலைமையில் ஐக்கிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தும் பெரும்பாலான இடங்களில்  வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் 40 எம்எல்ஏக்களுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பாஜகவில் இணைந்துள்ளது பாஜகவிற்கு மிகப்பெரிய பலத்தை தற்போது சேர்த்துள்ளது. பல மூத்த தலைவர்கள் அஜித் பாவருடன் சேர்ந்து பாஜகவில் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது சரத் பவார் கட்சி ஆரம்பக்கட்டத்திற்க்கே சென்று விட்டது, மேலும் அஜித்பவார் சரத்பவார் கட்சியில் இருந்து முக்கிய ஆட்களை அழைத்து சென்ற காரணத்தினால் சரத்பவார் கட்சி மீண்டும் எழுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வரும் தேர்தலில் நிற்பதை பற்றி யோசிக்க ஆரமித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ,மு க ஸ்டாலின், மற்றும் நிதிஷ்குமார் ஆகியோருக்கு வரும் காலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகி வருகிறது. 

கடந்த வாரம் பாட்னாவில் நடைபெற்ற கூட்டணியை சரத் பவார் ஒருங்கிணைந்து நடத்தியதற்கு பின் ஏற்பட்ட விளைவுதான் இது என வெளிப்படையாகவே பேச துவங்கிவிட்டனர். இருப்பினும் பாஜக தரப்பில் இதற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை, மகாராஷ்டிராவின் மிகப்பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கே இந்த நிலைமை என்றால் மற்ற மாநில கட்சிகள் நிலை என்னவாகும் என அடுத்த வரும் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு சில மாநில கட்சிகள் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சரத்பவர் கட்சிக்கு சின்னமாவது கிடைக்குமா என்ற பரிதாப நிலையில் இருக்கும்போது பிற கட்சிகள் சேர்ந்து செயல்பட எப்படி தைரியம் வரும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.