விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு தொடர்ச்சியாக மேடைகளில் இந்து மதத்திற்கு எதிராகவும், இந்து கொள்கைகளை பரப்புவர்களுக்கு எதிராகவும் சனாதானத்தை அகற்றுவோம் என பேசக்கூடியவர், மேலும் இந்து மதம் தான் சாதிய கட்டமைப்பிற்கு காரணம் எனவும் கூற கூடியவர்.
சமீபத்தில் கூட நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கோவில்கள் தான் அவர்களின் ஆதாரம் கோவிலை வைத்து தான் அரசியல் செய்கிறார்கள் என ஆவேசமாக பேசி இருந்தார் இப்படி மூச்சு பிடித்து பேசிய வன்னியரசு மதுரை ஆதினத்திடம் பய பவ்வியமாக திருநீறு வாங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது.
எந்த கோவில்களை அகற்ற வேண்டும் என வன்னியரசு கூறினாரோ அது போன்று பல கோவில்களை நிர்வகிக்கும் மதுரை ஆதீனத்தை சந்தித்து ஆசி வாங்கி இருப்பது இணையத்தில் பலத்த கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது, தான் ஒரு இந்து தான் ஒரு சைவன் என பெருமையாக பேசும் மதுரை ஆதினத்திடம் ஆசி வாங்க வன்னியரசு சென்றது ஏன் எனவும் பலரும் கேள்வி எழுப்பு கின்றனர்.
மொத்தத்தில் வன்னியரசு கோவில் குறித்து பேசிய வீடியோ காட்சிகளையும், வன்னியரசு மதுரை ஆதினத்திடம் ஆசி பெரும் புகைப்படத்தையும் பகிர்ந்து என்னனென்ன சொல்றாரு பாருங்க என கிண்டல் அடித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.வன்னியரசு கோவில்கள் குறித்தும் அண்ணாமலை குறித்தும் பேசிய வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.