திருவாரூரில் நடைபெற்ற திராவிட கழக மாநாட்டில் திராவிட கழகத்தலைவர் வீரமணி பேசியது பாஜக தலைவர்கள் இடையே கிண்டலை உண்டாக்கி இருக்கிறது,
திருவாரூரில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் திக தலைவர் வீரமணி கடுமையாக விமர்சித்து பேசுவதாக எண்ணி வடிவேலு பாணியில் காமெடி செய்துள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர் .வீரமணி பேசியதாவது, பெயரில் அண்ணாமலையாக இருக்கலாம். நாங்கள் கொள்கையில் எரிமலை. நன்றாக நினைத்துப் பார்க்க வேண்டும். எரிமலை பக்கத்தில் நீங்கள் வரக்கூடாது.
உங்களுக்கு கிடைத்திருக்கும் பாஜக தலைவர் பதவியே திராவிட இயக்கத்தால் திராவிட இயக்கத்தின் எதிரொலியால் கிடைத்த பதவி தான் என குறிப்பிட்டு பேசி இருந்தார் இதுதான் பாஜகவினரை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது, விட்டால் பிரதமர் மோடி பிரதமராக பொறுப்பு வகிப்பதே திராவிட கழகத்தின் எதிரொலியால்தான் என வீரமணி சொன்னாலும் சொல்வார்.
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை மீது நம்பிக்கை வைத்து அக்கட்சி தலைமை கொடுத்துள்ளது அதற்கும் வீரமணி இயத்திற்கும் என்ன சம்பந்தம் என பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர், எது நடந்தாலும் பெரியார்தான் காரணம் என ஸ்டிக்கர் ஒட்டிய திராவிட கழகம் இப்போது அண்ணாமலை நியமனம் மீதே ஸ்டிக்கர் ஒட்டி பிளேட்டை மாற்றி இருக்கிறது என பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். வடிவேல் திரைப்படம் ஒன்றில் நகைச்சுவை வசனம் போல் அமைந்துள்ளது வீரமணியின் நிலை.