Cinema

அட்லீக்கு அண்ணனாக மாறிய லோகேஷ்... படத்தை சுடுவதில் இவர்களே முதல் இடம்..!

Lokesh kanagaraj, Vijay
Lokesh kanagaraj, Vijay

தமிழ் சினிமாவில் தற்போது இளம் இயக்குனர்கள் படையெடுத்து வருகின்றனர். அவர்களின் முதல் படம் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து முன்னனி இயக்குனர்களை கொண்டு இயக்கி வருகிறார்கள். அப்படி முன்னணி நடிகர்களை கொண்டு எடுக்கப்படும் படமானது வெற்றி பெற்றாலும் அந்த படம் மற்ற மொழிகளில் இருந்து காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம் என்பதை வெளியிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள் அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார் அதும் விஜய் படத்திற்கு இப்படி ஒரு செய்கையா என கேள்வி எழுந்துள்ளது.


முன்னதாக வெளியான படங்கள் எல்லாம் ஒரு கருத்தை மையமாக கொண்டு இயக்குனர்கள் அதனை மக்கள் இடத்தில் கொண்டு செல்லும் வகையில் இயக்குவார்கள் அந்த படமும் 100 நாட்களை தாண்டி ஓடும். அது போல தற்போது வெளியாகும் படங்கள் ஒரு வாரம் தியேட்டரில் ஓடுவதே பெரியதாக இருக்கிறது. இதற்கிடையில் இயக்குனர் ஷங்கருடன் பணிபுரிந்தவர் இயக்குனர் அட்லீ முதன் முதலாக ராஜாராணி என்ற படத்தை நடிகர் ஆர்யா, ஜெய் உள்ளிட்டவர்களை கொண்டு இயக்கினார். படம் வெற்றி பெற்றாலும் அந்த படத்தின் இன்ச் பை இன்ச் மற்ற மொழி படத்தில் இருந்து உருவப்பட்டதாக ட்ரோல் செய்யப்பட்டது. அதன் பிறகு அட்லீ இயக்கத்தில் வெளியான படம் எல்லாம் காப்பி செய்த படம் என இணையத்தில் அவரை வைத்து ட்ரோல் செய்யப்ப்பது.

அட்லீயை தொடர்ந்து மற்ற இயக்குனர்கள் எடுக்கும் படங்கள் அனைத்தும் காப்பி செய்திருந்தாலும், அட்லீயை மட்டுமே கலாய்த்து வருவார்கள் என்பதை தொடர்கதையாக வைத்துள்ளனர். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுத்தப்படத்தை எங்கு இருந்து காப்பி பேஸ்ட் செய்தார் என்பதை வெளியிட்ட நெட்டிசன்கள் அட்லீக்கு அண்னன் லோகேஷ் என பங்கம் செய்து வருகின்றனர். கைதி படம் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 

கார்த்தியை தொடர்ந்து விஜய், விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான படம் மாஸ்டர். நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் இந்த படத்தை இயக்கினார். கமல் நடித்த நம்மவர் படத்தின் இன்ஸ்பிரேஷன் எனக் கூறப்பட்டது. ஆனால், மலையாள ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் சொல்வது உண்மையில்லை மலையாளத்தில் மம்மூட்டி நடித்த படத்தில் இருந்து இன்ச் பை இன்ச் எடுத்துள்ளார் என் ஆதாரமாக வெளியிட்டுள்ளனர். லோகித் தாஸ் எழுதி சிபி மலையாளி இயக்கிய முத்ரா எனும் மலையாள திரைப்படம் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் சிறையில் இருக்கும் கைதிகளை திருத்தும் அதிகாரியாக மம்மூட்டி நடித்துள்ளார்.

அந்த படத்தில் இருந்து தான் லோகேஷ் சுட்டுள்ளார் அதனை தனா அப்படியே விஜய் நடித்து வெளியான கில்லி படம் மூலமாக எடுக்கபப்ட்டுள்ளதாக கூறி தெலுங்கு ரசிகர்களை மலையாள ரசிகர்கள் பங்கம் செய்து வருகின்றனர் கோலிவுட் சினிமாவை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதே விஜயை வைத்து எடுக்கப்பட்ட படம் லியோ கடந்த வருடம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றது.  ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் எனும் ஹாலிவுட் படத்தை தழுவி தான் லியோ உருவாக்கப்பட்டது என கிரெடிட்ஸ் கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால், லியோ படம் ஹாலிவுட்டிலிருந்து எடுக்கப்பட்டது இல்லை அது தெலுங்கில் ஜகபதி பாபு நடித்த காய்ம் 2 படத்தில் இருத்து எடுக்கப்பட்ட்டது என அவர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதற்கு தமிழ் ரசிகர்கள் கோலிவுட்டை காப்பாத்துங்கள் என இயக்குனர்களை டேக் செய்து வருகின்றனர்.  

அந்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுவும்...                                                                                              https://twitter.com/i/status/1759239895271227856