கடந்த வருட தொடக்கத்திலிருந்து தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான இளைய தளபதி விஜய் அரசியலில் இறங்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார். முதலில் முக்கிய தலைவர்களின் நினைவு தினத்தின்பொழுது விஜயின் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதற்குப் பிறகு 10 மற்றும் 12ம் பொது தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற முதல் மூன்று மாணவ மாணவிகளை தொகுதி வாரியாக தேர்ந்தெடுத்து அவர்கள் அனைவருக்கும் நடிகர் விஜயே பரிசுகளை வழங்கியது அரசியல் வட்டாரத்தின் கவனத்தை பெற்றது. அதற்குப் பிறகு விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் பல தொண்டு செயல்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது அதாவது மாவட்டம் தோறும் இரவு பாடக சாலை தொடங்கப்பட்டது நூலகம் அமைக்கப்பட்டது பலருக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து விஜயின் நடிப்பில் வெளியான படங்களில் தொடர்ச்சியாக விஜய் அரசியல் சார்ந்த கருத்துக்களை மறைமுகமாக பேசி வந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளியாகும் படங்களின் இசை வெளியீட்டு விழா வெற்றி விழா என அனைத்துமே பிரச்சாரம் போன்ற அளவில் கூட்டங்கள் குவிந்ததும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சென்னை மற்றும் தென் தமிழகத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பிற்கு விஜய் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது சில விமர்சனங்களையும் பெற்றது. அதோடு தூத்துக்குடிக்கு நேரடியாக சென்ற விஜய் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தன் கையாலே நிவாரணப் பொருட்களை வழங்கியதும் இணையதளங்களில் வைரலானது.
இப்படி காணப்பட்ட விஜயின் நடவடிக்கைகள் அனைத்தும் வைத்து அரசியல் விமர்சகர்கள் கண்டிப்பாக விஜய் தேர்தலில் இறங்குவார் 2026 அவரது இலக்கு என்ற விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதற்கான விண்ணப்பத்தை தொடங்கியுள்ளதாகவும் இதனை அடுத்து கட்சி நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று டி வி கே என்ற தனி சமூக வலைதள பக்கம் தொடங்கப்பட்டு கட்சி குறித்த அறிக்கைகளை விஜய் வெளியிட்டுள்ளார். அதில் பல வருடங்களாக விஜய் மக்கள் இயக்கம் தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் சமூக சேவைகளையும் செய்து வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் இருப்பினும் முழுமையாக சமூக பொருளாதார அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டுமே இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே! நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழல் மொழிந்த அரசியல் கலாச்சாரம் ஒரு புறம் என்றால் நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் பிளவுவாத அரசியல் கலாச்சாரம் மறுபுறம் இன்று ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு இறுதியில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றி கழகம் பங்கு பெறப்போவதில்லை எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்கழக மற்றும் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என விஜய் தனது அரசியல் பயணம் குறித்த தொடக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை அடுத்து விஜயின் ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அவரது அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர் ஆனால் சில விமர்சனங்களும் இதற்கு முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் தனது பொதுச் செயலாளருடன் டெல்லிக்கு செல்லும்போது மற்றுமொரு நபருடன் சென்றுள்ளதாகவும் அந்த நபர் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என சமூக வலைதளத்தில் பல பதிவுகள் உலா வருகிறது ஆனால் நமது செய்தியாளர்கள் தரப்பில் விசாரித்து பார்த்த சமயத்தில் புஸ்ஸி ஆனந்த் உடன் சென்ற நபர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் இல்லை, அவர் வேறு நபராக இருக்கலாம் எனவும் செய்திகளை உறுதிப்படுத்துகின்றனர்.