Cinema

கொஞ்ச நாள் கூட இல்ல மீண்டும் வசமாக சிக்க போகும் TTF!

ttf vasan
ttf vasan

பைக் வீலிங் செய்து youtube சேனல் மூலம் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன், மேலும் நாட்டின் பல பகுதிகளுக்கு இருசக்கர வாகனம் மூலமாகவே பயணம் மேற்கொண்டு அதிக பாலோவர்சை பெற்றவர் ஏனென்றால் இளைஞர்களுக்கு எப்பொழுதுமே பைக் வீலிங் மற்றும் பைக்கிலே சுற்றுப்பயணம் மேற்கொள்வது மிகவும் அலாதியானது! இதனை அடுத்து காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபடும்போது விபத்தில் சிக்கி கையில் பலத்த காயம் பெற்றார். இதனை அடுத்து டிடிஎஃப் வாசன் மீது சாலை விதிமுறைகளை மீறி விபத்தில் சீக்கியதால் 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 


அதற்குப் பிறகு டிடிஎஃப் வாசன் காரப்பேட்டை அருகில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைகள் முடிந்த பிறகு காவல்துறை வரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது அதை எடுத்து இரண்டு மாதங்கள் சிறைதண்டனையை பெற்றார். ஆனால் இந்த வழக்கில் பலமுறை ஜாமீன் கேட்டு அவரது மனு நிராகரிக்கப்பட்டே வந்தது இருப்பினும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அப்பொழுது டிடிஎஃப் வாசனின் பைக்கை எரித்து விடவும் அவரது சேனலை முடக்கி நாட்டில் எந்த பகுதியிலும் அவர் இருசக்கர வாகனம் ஓட்ட முடியாதபடி அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார், தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்ட வந்த நிலையில் இந்த கண்டிஷனுடனாவது வெளியில் விட்டார்களே என்ற ஒரு நிம்மதியில் டிடிஎஃப் வாசன் சிறையிலிருந்து வெளியேறினார். 

இருப்பினும் அதற்குப் பிறகும் கடற்கரையில் ஒரு பெண்ணின் மடியில் அவர் படுத்து "போன வருஷம் தான் ரொம்ப கஷ்டம் இந்த வருஷம் நல்லா இருக்கே" என்று பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் மீண்டும் தற்பொழுது வீடியோ வாசன் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது இருசக்கர வாகனம் ஓட்ட முடியாதபடி ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து டி டி எப் ஆட்டோமொபைல் லிமிடெட் என்ற பெயரில் ஒரு பிசினஸை ஆரம்பித்தால் இந்த ஷாப்பில் இருசக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் மற்றும் ரைடு செல்லும் பொழுது பொருத்தப்படும் கியர்கள் ஜிபிஎஸ் ட்ராக்கர் என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டது இந்த அனைத்து பொருட்களுமே உயர் தரத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் எங்கள் கடையில் விற்கப்படும் ஜிபிஎஸ் டிரக்கரின் ஹார்டுவேர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் சாப்ட்வேரை நாங்களே தயாரிப்பதாகவும் இதன் மொத்த விலை ரூபாய் 7000 ஆனால் நம்ம பசங்களுக்காக தள்ளுபடி 3500 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம் இது எங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை என்று பலவாறு பேசியிருந்தார்.

இதனை அடுத்து இவரது ரசிகர்கள் மற்றும் பாலவர்ஸ் அனைவரும் இந்த ஜிபிஎஸ்ஐ வாங்க குவிந்தனர். இந்த நிலையில் ஒரு youtube சேனல், வாசன் விற்பனை செய்து வரும் ஜிபிஎஸ் டிராகரின் விலை வெறும் 750 ரூபாய் மட்டுமே என்றும் சாஃப்ட்வேரை அவர் தயாரிக்காமல் ஒரு கம்பெனியில் இருந்து வாங்கி தான் தயாரித்ததாக கூறி ஜிபிஎஸ் இல் பயன்படுத்தப்படும் சிம் ரீசார்ஜ் என மொத்தம் சேர்த்து MRP யாக ஏழாயிரம் ரூபாய் என்றும் தள்ளுபடி 3500 ரூபாய் தருகிறோம் என்றும் கூறியிருந்தார் ஆனால் இதன் MRP விலை ரூபாய் 2200 மட்டுமே என வாசன் செய்த மோசடியை தெள்ளத்தெளிவாக வீடியோவில் வெளியிடப்பட்டது. இதனால் டிடிஎஃப் வாசனின் பாலோவர்ஸ்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் குமுறலை தெரிவித்து வருகின்றனர்.