Cinema

லால் சலாமை காப்பாத்துங்கள்...ரஜினியை கலாய்க்கும் ப்ளு சட்டை மாறன்..!

Blue sattai maaran, rajinikanth
Blue sattai maaran, rajinikanth

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து திரை உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தமிழக அரசியலில் ஈடுபட போவதாக கடந்த சில வருடங்களுக்கு முன் அறிவித்து பிறகு அந்த முடிவிலிருந்து பின் வாங்கினார். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.  இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தை பங்கமாக கலாய்த்துள்ளார்.


நெல்சன் இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியில் உற்சாகமாக 3 படங்களை புக் செய்தார் ரஜினி. பொதுவாக ஒரு படத்திற்கு நடுவே சில மாதங்கள் ஓய்வு எடுத்துவிட்டுத்தான் ரஜினி அடுத்த படத்தை துவங்குவார். ஆனால், ஜெயிலர் படத்திற்கு பின் 3 படங்களில் நடிக்க முடிவு செய்தார் ரஜினி. அந்த வரிசையில் மக்கள் ஐஸ்வர்யா இயக்கத்திலும், ஞானவேல் இயக்கத்திலும் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் கமிட் ஆனார். அதாவது, மகள் படத்தில் தற்போது நடித்த முடித்த நிலையில் அந்த படத்தில் ஆடியோ வெளியிட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது. 

அடுத்ததாக ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன், படத்தில் முக்கியத்துவம் கொடுத்து நடித்துவரும் ரஜினிகாந்த் இதன் படப்பிடிப்பு கேரளா மாநிலத்தில் தொடங்கியது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்ட பணிகள் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் நடந்து வருகிறது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள புதிய படம் என பரபரப்பு காட்டினார் ரஜினி. லால் சலாம் கெஸ்ட் ரோல் என்பதால் படம் வேகமாக முடிந்து வருகிற 9ம் தேதி படம் வெளியாகவுள்ளது.  இந்த படம் தொடர்பாக மிக பெரிய வெற்றியை நோக்கி இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்திற்கான புரமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ஒரு கதை சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படித்தான் ஜெயிலர் பட விழாவில் பேசிய குட்டி கதை தான் விஜயை மையப்படுத்தி பேசியதாக கூறி ரசிகர்கள் இடையே பெரும் விமர்சனம் எழுந்தது. அதன் பிறகு விஜய்யும் இதற்கு விளக்கம் கொடுத்திருந்தார். தற்போது நடந்த லால் சலாம் படத்தில் நான் சொன்ன காக்கா – கழுதை விஜயை மனதில் வைத்து இல்லை. பலரும் அப்படி திசை திருப்பிவிட்டனர். விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். அவரின் வளர்ச்சியில் எனக்கும் அக்கறை உண்டு என பேசினார்.  இதுவும் சமூகவலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. எதற்காக ரஜினிகாந்த் நேரம் பார்த்து பேசுகிறார் படத்திற்கு விளம்பரம் தேடுகிறார் என கேள்வி முன் வைத்தனர்.

ஒருபக்கம், சினிமாவில் மதநல்லிணக்கம் பேசும் ரஜினி நிஜவாழ்க்கையில் அப்படி இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்காக எப்பவும் பேசமாட்டார் என்றே பரவலாக ஒரு கருத்து உள்ளது.  இத்திண்ணை தெள்ள தெளிவாக கூறிவருவது பிரபல திரைவிமர்சகர் ப்ளு சட்டை மாறன். இந்நிலையில், லால் சலாம் படம் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ‘மும்மதமும் எங்களுக்கு முதல் மதமே. லால் சலாம் வெற்றி பெற வாழ்த்துகிறோம்’ ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு இணையத்தில் ப்ளு சட்டை மாறன் 'லால் சலாம் படத்தை ஹிட் ஆக்க வேண்டுகிறார்.. காப்பாத்துங்க மக்களே’  என பதிவிட்டுள்ளார். இதற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.