24 special

விஜயகாந்துக்கு இறுதியில் துரோகம் செய்த விஜய்!....இறுதி அஞ்சலி செலுத்த வருவாரா?

vijayakanth, vijay
vijayakanth, vijay

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் உயிரிழந்த அதிர்ச்சி அறிவிப்பை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. விஜயகாந்தின் ரசிகர்கள், தொண்டர்கள், பிரபலங்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.மதுரையில் பிறந்த விஜயகாந்த் சினிமா மீது பற்று கொண்டு சென்னைக்கு வந்து 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இதுவரை 150 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். விஜயகாந்த் இதுவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவரது திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள குறிப்பிடப்படும் பிரபலங்களில் இவரும் ஒருவராவார். 


இவருக்கு தமிழ் சினிமாவில் "புரட்சி கலைஞர்' என்னும் பட்டம் உண்டு.100வது படமாக கேப்டன் பிரபாகரன் அமைந்தது இதன் பிறகு கேப்டன் விஜயகாந்த் என்று அறிமுகமானார். : நடிகர் விஜயகாந்த் ஆரம்பத்தில் இருந்தே இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். 1993ம் ஆண்டு விஜயகாந்தை வைத்து ராஜதுரை படத்தை இயக்கிய எஸ்.ஏ. சந்திரசேகர் அதே ஆண்டு விஜயகாந்தை வைத்து இயக்கிய செந்தூரப் பாண்டி படத்தில் தனது மகன் விஜய்யையும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார். விஜய்யின் அறிமுக படமான நாளைய தீர்ப்பு படம் சொதப்பிய நிலையில், சம்பளமே வாங்காமல் விஜய்க்காக செந்தூரப்பாண்டியில் டைட்டில் கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்துக் கொடுத்தார். அந்த படம் விஜய்க்கு பெரியளவில் கை கொடுத்தது.

நடிகர் விஜய்க்கு மட்டுமின்றி சினிமாவில் நடிகர் சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களுக்கு உறுதுணையாக இருந்து திரையில் வளர்த்து விட்டவர் என்ற பெருமை முழுவதும் விஜயகாந்துக்கு சேரும். விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக அவர் இருந்த காலத்தில் சினிமா துறையில் வரக்கூடிய பிரச்னைகளை தீர்த்து வைத்தவர். இப்படி பட்ட மாமனிதனை திரையுலகத்தில் உள்ளவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதாவது நடிகர் விஜய் சினிமாவில் அடியெடுத்து வைத்ததும் அவருக்கு மக்கள் பெரும் ஆதரவு கொடுக்கவில்லை குறிப்பாக உருவ கேலி போற்றவற்றிக்கு விஜய் தள்ளப்பட்டார். அப்போது சினிமாவில் பிக்கில் இருந்தவர் விஜயகாந்த் இவரை விஜயின் அப்பா அழைத்து விஜயுடன் ஒரு படத்தை நடிக்க சொல்ல கேட்டார். உடனே விஜயகாந்தும் தம்பிக்காக இது கூட செய்யமாட்னா என குறி சரி சொன்னார் அப்படி உருவான படம் தான் செந்தூரப்பாண்டி. 

அந்தப்படம் மூலம் நடிங்கர் விஜய்க்கு வைபை பெரிய அளவில் கிடைத்தது, குறிப்பாக இப்பொது அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு மாற்றத்திற்கு காரணமே விஜய்காந்து தான். அப்படி இருக்கையில் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பல இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் அவர் நலம் குறித்து இதுவரை விஜய் கண்டுகொள்ளாதது ஏன் என பலமுறை வெளிநாடு சென்று பல சிகிச்சை மேற்கொண்ட விஜயகாந்த் அவரை தொலைபேசியிலோ அல்லது நேரிலோ சென்று பார்க்காதது சினிமாத்துறையில் பெரும் அதிருப்தியை கொடுத்துள்ளது. சினிமாவில் ஒரு மனிதனால் கடந்து வந்த பாதையை எப்படி மறக்கமுடிகிறது என இணையத்தில் ஓர் பக்கம் பேச்சு எழுகிறது. சூர்யா மற்றும் வடிவேலும் இதே வராசியில் இருப்பதாக ரசிகர்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.