24 special

நடிகர் சங்கத்திற்கு வாழ்வு கொடுத்த விஜயகாந்த்

vijayakanth
vijayakanth

 150 திரைப்படங்களுக்கு மேல் அடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரும் தமிழக மக்களின் மனதில் தனக்கென இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த விஜயகாந்திற்கு தமிழ் சினிமாவில் அதிக எதிர்ப்புகளும் ஏமாற்றமுமே கிடைத்தது, ஏனென்றால் அவரது நிறம்  ஒரு காரணமாக கூறப்பட்டு பல நிராகரிப்புகளை அவர் சந்தித்தார். இருப்பினும் மனம் தளராது தொடர்ந்து முயற்சி செய்த நடிகர் விஜயகாந்த் 1977 ஆம் ஆண்டு  இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். கேப்டன் விஜயகாந்தின் திரைப்படத்தை தொடங்கி வைத்த இயக்குனர் காஜாவிற்கு விஜயகாந்தின் இயற்பெயரான விஜயராஜ் என்ற பெயரில் நாட்டம் இல்லாததால் அந்த சமயத்தில் நடிப்பின் உச்சத்தில் இருந்த ரஜினிகாந்தின் பெயரிலிருந்து காந்தை எடுத்து விஜயகாந்த் என்று பெயர் மாற்றம் செய்தார். 


அதற்குப் பிறகு பல வெற்றி படங்களை நடித்து குறுகிய காலத்திலே சினிமாவில் முன்னணி நாயகனாக உருவெடுத்தார். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரும் ராமநாராயணனும் விஜயகாந்துக்கு அதிக எண்ணிக்கையான படங்களை கொடுத்தனர் அதற்கேற்ற வகையில் அனைத்து படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் ஒரு வருடத்தில் மட்டும் பதினெட்டு படங்களை எடுத்துக் கொடுத்துள்ளார். இதற்கிடையிலே தனது படப்பிடிப்பின் போது எவரேனும் உதவி என்று கேட்டு வந்தால் அனைவருக்கும் பல உதவிகளை வழங்கி உணவளித்து அனைவருக்கும் சமமான மரியாதையும் சமமான உணவையும் வழங்கி அனைவரையும் சமமாக நடத்தி மற்றும் நடிகையின் நடிகர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். தனது படங்கள் மூலம் நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் தேசத்தின் நலமே நமது நலம் என்ற நாட்டை காக்கும் வீரனாக பல படங்களில் நடித்திருந்த கேப்டனுக்கு இயல்பாகவே உதவி குணம் கொண்டதால் மக்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் சேவையாற்ற வேண்டும் என்பதற்காக 2005ல் தான் பிறந்த மதுரையிலேயே தேசிய முற்போக்கு கழகம் என்று கட்சியை தொடங்கி இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு என்ற முழக்கமிட்டார். இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் 1999 ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றார் இதற்கு முன்னதாக 1996 ஆறாம் ஆண்டு மறைந்த முன்னாள் தமிழகம் முதலமைச்சரான கருணாநிதிக்கு திரையுலகில் பொன்விழா நடத்துவதற்கு அன்றைய காலத்தில் இருந்த நடிகர்கள் அனைவரும் பின்வாங்க விஜயகாந்த் பொன்விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்தார். இப்படி பல பெருமைகளை செய்து வந்த கேப்டன் விஜயகாந்த் இன்று என் மண்ணுலகை விட்டு உயிர் நீத்தார். இதனால் கேப்டன் விஜயகாந்த் உயிருடன் இருந்த பொழுது செய்த பல நன்மைகள் செய்த பல உதவிகள் தற்பொழுது வெளிவர தொடங்கி உள்ளது. 

அந்த வரிசையில் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு நடிகர் சங்க தலைவராக எம்ஜிஆர், சிவாஜி போன்ற பெரிய ஜாம்பவான்கள் தலைவராக இருந்த பொழுதும் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் நடிகர் சங்கம் கடனில் மூழ்கி இருந்தது தனக்கென்று ஒரு சொந்த இடத்தை கூட வாங்க முடியாத நிலையில் இருந்தது. அப்படி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் தான் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று பல இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வெளிநாட்டிற்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலமாக பெற்ற வருமானத்தில் நடிகர் சங்கத்தின் கடன் முழுவதுமாக அடைத்து, நடிகர் சங்கத்திற்கென்று கையிருப்பு பணத்தையும் வங்கியில் டெபாசிட் செய்தார், கடனில் மூழ்கி இருந்த நடிகர் சங்கத்தை தூக்கி நிறுத்திய விஜயகாந்த் தற்போது உயிரிழந்த செய்தி தமிழ் திரையுலகை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.