Cinema

சொன்னதை செஞ்ச த்ரிஷா.. சிக்கி தவிக்கும் அதிமுக முன்னாள் நிர்வாகி!

Trisha, AV Raju
Trisha, AV Raju

கூவத்தூர் விவகாரம் தொடர்பாக நடிகர்கள், நடிகை குறித்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏவி.ராஜூ பேசியது, இணையத்தில் வைரலானது. இதற்கு நடிகர்கள் சங்கம் அவருக்கு கண்டனம் தெரிவித்து நடிகை திரிஷாவுக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். இணையத்தில் இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் அரசியல் தலைவர்கள் சினிமா வட்டாரங்கள் என பலரும் ஆதரவு கொடுத்து வந்தனர் திரிஷாவுக்கு. இந்நிலையில் நடிகை திரிஷா வக்கீல் நோட்டிஸ் அனுப்பி உள்ளார்.


அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு, அண்மையில் அளித்த பேட்டியில் நடிகை த்ரிஷா குறித்தும் மற்ற நடிகைகள் குறித்தும் மோசமாக பேசி இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து. நடிகை திரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து இயக்குநர் சேரன்,குஷ்பு, கஸ்தூரி என திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இதுகுறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக உள்ளது. தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இனிமேல் சொல்ல வேண்டிய ஒன்றும் இல்லை அனைத்தையும் சட்டப்படி செய்வேன் என பதிவிட்டு இருந்தார். ஆனால், முன்னி நடிகர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்காதது சினிமாவில் ஒற்றுமை இல்லாததை இந்த சமத்துவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என சினிமா பத்திரிகையாளர் கூறி வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த நாளே ராஜு வீடியோ மூலம் நான் திரிஷாவை சொல்லவில்லை திரிஷா போல தான் என்று சொன்னேன் என வருத்தம் தெரிவித்தார். அது ஒரு பக்கம் இருக்க ராஜுக்கு த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசை திரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஏ.வி.ராஜுவின் பேச்சால், கடந்த நான்கு நாட்களாக மன உளைச்சலுக்கு ஆளானேன் என்றும். இதற்கு குறிப்பிட்ட தொகையை அவருக்கு கொடுக்க வேண்டும் என அந்த வக்கீல் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஊடகங்கள், மின்னணு ஊடகங்கள், செய்தி ஊடகம், யூடியூப் தளங்கள் உட்பட அனைத்திலும் த்ரிஷாவிற்கு எதிராக எந்த அவதூறான செய்தியை வெளியிடுவதை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பத்திரிக்கை, சமூக வலைத்தளங்களில், த்ரிஷா குறித்து அவர் பேசியுள்ள, வெளியிட்டுள்ள அவதூறான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் அனைத்து பதிவுகளையும் உடனடியாக நீக்க அல்லது அகற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இந்த அறிவிப்பை பெற்ற 24 மணி நேரத்திற்குள் திரிஷாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதுடன், மன்னிப்பு அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் ஏ.வி.ராஜூவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தமிழ் ஆங்கில செய்தித்தாள்களில் மன்னிப்புக் கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் திரிஷாவுக்கு ஆதரவாக சொன்னதை செஞ்ச பெண்மணி என ஆதரவு தெரிவித்து உள்ளனர். ஆனால், மற்றொரு பக்கம் மன்சூர் அலிகான் விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த நீங்கள் தற்போது அரசியல் பிரச்சனையில் மெதுவாக நடவடிக்கை கரணம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.