24 special

இரவோடு இரவாக வந்த விஜய் வெளியே போ என அதிர்ந்த கூட்டம்

vijayakanth, vijay
vijayakanth, vijay

அந்த வானத்தப்போல மனம் படைச்ச வல்லவனே பனித்துளியே போல குணம் படைச்ச தென்னவனே என்ற பாடலின் வரிகளுக்கேற்ற அந்த வரிகளில் சொந்தக்காரராக இருந்த கேப்டன் விஜயகாந்த் நேற்று உடல்நலக்குறைவால் இறைவனிடம் சேர்ந்தார். அரசியலில் இறங்கி குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்ட செல்வாக்கால் எதிர்க்கட்சி தலைவராக மாறிய விஜயகாந்த் பல அரசியல் சூழ்ச்சிகளிலும் ஏமாற்று வேலைகளிலும் சிக்கி கடந்த சில தேர்தல்களில் படும் தோல்விகளை சந்தித்து வந்தார் இதற்கிடையிலே அவரது உடல் நிலையும் மிகவும் மோசமானது. சமீபத்தில் உடல் நலம் பெற்று வீடு திரும்பிய விஜயகாந்த் மீண்டும் உடல் நலக்குறைவால், அவரது உயிர் உடலை விட்டு பிரிந்து சென்றது.


இந்த செய்தி பலரது இதயத்தையும் வாட்டுகிறது அது மட்டும் இன்றி திரை உலக பிரபலங்கள் தங்கள் ஆழ்ந்த வருத்தத்தையும் திரை உலகிற்கு அவர் செய்த உதவிகள் பலவற்றையும் எடுத்துரைத்து இனிமேல் இதுபோன்ற நடிகரையும் அண்ணனையும் தம்பியையும் பார்க்கவே முடியாது என விஜயகாந்தின் பெருமைகளை கூறி கண்ணீர் விட்டு வருகின்றனர்.  இதனை அடுத்து மதியம் ஒரு மணியில் இருந்து இறுதி ஊர்வலம் பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேடு தலைமை அலுவலகம் எடுத்துச் செல்லப்பட்டு கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலக வளாகத்தில் அவரது உடல் மாலை 4 45 மணியளவில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தேமுதிக தலைமை அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜயகாந்த் இறப்பதற்கு முன்பாக பேசிய பல வீடியோக்களும் கருத்துக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அது மட்டும் இன்றி விஜயகாந்த் உயிருடன் இருக்கும் பொழுது அவரை பழித்தும் இகழ்த்தும் பேசி நன்றி உணர்வை மறந்த அனைவர் மீதும் அவரது தொண்டர்களும் ரசிகர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த வரிசையில் நடிகர் விஜய், விஜயகாந்த் காண்பதற்காக நேற்று இரவு வந்துள்ளார், வந்தவர் கண்ணீர் மல்க விஜயகாந்த் உடலை பார்த்து வேதனை உற்ற காட்சிகள் பல ஊடகங்களில் வெளியானது, அதோடு விஜய்யை வெளியே போ வெளியே போ என்று விஜயகாந்தின் ரசிகர்களும் தொண்டர்களும் கொந்தளித்து முழக்கமிட்டனர். 

ஏன் விஜய் மீது இந்த கோபம் என்றால், நடிக்க வேண்டும் என்ற ஆசையில் நடிகராக விஜய் நடித்து வெளியான நாளைய தீர்ப்பு படம் அவருக்கு பெரும் தோல்வியையும் கடும் விமர்சனங்களையும் கொடுத்தது, அந்த நிலையில் விஜயின் மனம் தடரக்கூடாது என்பதற்காக அவரை தட்டி எழுப்பி செந்தூரப் பாண்டி என்ற விஜய்யின் இரண்டாவது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை நடிகர் விஜயகாந்த் நடித்து அதற்கு சம்பளத்தையும் வேண்டாம் என்று கூறி விஜயின் மக்கள் மனதில் பதிய வைத்தார். விஜய்யின் செந்தூரப் பாண்டி படம் வெளியாகும் பொழுது விஜயகாந்த் ஒரு சூப்பர் மாஸ் ஹீரோவாக இருந்தவர் அந்த நேரத்தில் அவர் இதுபோன்ற படங்கள் நடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் இருந்தது இருப்பினும் விஜய்க்காக இதனை செய்தார் விஜயகாந்த்!  அப்படி விஜய்யின் திரை வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த கேப்டனை விஜய் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் அரசியலில் சூழ்ச்சிகளின் சிக்கி இருந்த பொழுதும் உதவி புரியவில்லை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொழுதும் அவரை வந்து இவரை பார்க்கவில்லை என்பதே விஜயகாந்தின் ரசிகர்களையும் தொண்டர்களையும் கோபப்படுத்தியுள்ளது. 

அதுமட்டுமின்றி விஜயகாந்த் எப்படி செந்தூரப் பாண்டி படத்தில் விஜய்க்கு உறுதுணையாக நடித்து புகழ் பெறச் செய்தாரோ அதே போன்று தனது மகன் சண்முக பாண்டியனை ஹீரோவாக நடிக்க வைத்து அதில் விஜய்யை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க கேட்டுள்ளார்கள் ஆனால் விஜய் மறுத்துள்ளதும் விஜயகாந்த் தரப்பினரை கோபமடைய செய்துள்ளது எனவும் கூறப்படுகிறது. விஜய் திரையுலக வாழ்க்கைக்கு உதவிய விஜயகாந்த் மகனுக்கு விஜய் உதவவில்லை என்பதும் விஜயகாந்த் தரப்பிற்கு பெரும் கோபம் அதன் காரணமாக விஜயை வெளியே போ என இறுதிச்சடங்கில் கோஷமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.