24 special

விஜயகாந்த் மகனுக்கு உதவி செய்ய தயார்... பிரபல நடிகரின் பதிவு!

Vijayakanth, Raghava Lawrence
Vijayakanth, Raghava Lawrence

தமிழ் சினிமாவில் அனைத்து மக்களின் ஆசி பெற்றவர் கேப்டன் விஜயகாந்த், இவரது மறைவு அனைத்து மக்களிடத்திலும் சோகத்தை ஏற்படுத்திருந்தது. அவரது மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத நடைக்கற்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் நேரில் அஞ்சலி செலுத்தாமல் இருந்த ராகவா லாரன்ஸ் சமீபத்தில் நேரில் சென்று விஜயகாந்த் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக இணையத்தில் பதிவிட்ட பதிவு தான் தற்போது இரு தரப்பில் இருந்தும் விமர்சனம் பெற்று வருகிறது.


விஜயகாந்த் சினிமா வாழ்க்கையில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு உதவி செய்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று, அதிலும் தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியுள்ள விஜய்க்கு ஆரம்பகாலகத்தில் செந்தூரபாண்டி படத்தில் நடித்ததன் பேரில் விஜய்க்கு உதவி செய்திருந்தார். பெரியண்ணா படத்தில் நடிகர் சூர்யாவுக்கு அண்ணனாக நடித்ததன் மூலம் சூர்யாவுக்கு உதவி செய்திருந்தார். எங்கள் அண்ணா படத்தில் பிரபுதேவா, பாண்டியராஜ் உடன் நடித்து கொடுத்திருப்பார் விஜயகாந்த். இப்படி சினிமாவில் பாரபட்சமின்றி பலருக்கும் உதவி செய்தவர் ஆனால், வளர்ந்தவர்கள் யாரும் விஜயகாந்த் உயிருடன் எட்டிப்பார்க்கவில்லை என்பது சர்ச்சையாக மாறியது. 

இந்நிலையில் விஜயகாந்தின் இளைய மகனான சண்முகப்பாண்டியனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். தான் சினிமாவில் வந்ததும் மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் வீடியோ வெளியிட்ட லாரன்ஸ் "விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் சினிமாவில் நடித்திருப்பதாக என்னிடம் சொன்னார்கள் திரையுலகை சேர்ந்த நீங்கள் எல்லோரும் தான் அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். அவர்கள் சொன்ன அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. விஜயகாந்த் சார் திரையுலகிற்கு செய்யாத உதவிகளே இல்லை. மற்ற ஹீரோக்கள் படத்தில் கேமியோ கெஸ்ட் ரோல் எல்லாம் செய்வார். அவர் பல ஹீரோக்களை வளர்த்து விட்டிருக்கிறார் .

மேலும், சண்முகப்பாண்டியனுக்கு இயக்குநர்கள் நடிக்க முன்வந்தால் அந்த படத்தில் தான் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க தயாராக உள்ளேன் என வீடியோ மூலம் பதிவிட்டுள்ளார். நடனம் மூலமாக சினிமாவில் வந்த ராகவா லாரன்ஸ் விஜயகாந்தின் கண்ணுப்பட போகுதையா படத்தில் நடன ஆசிரியராக பணிபுரிந்தவர் லாரன்ஸ். இந்த பதிவ்க்கு ஆதரவு வந்தாலும் ப்ளு சட்டை மாறன் ஒரே வார்த்தையில் 'அடடே' ஏன் தெரிவித்துள்ளார். இது பாசிட்டிவாக சொன்னாரா அல்லது விமர்சனத்திற்க்காக சொன்னாரா என கேள்வி எழுந்துள்ளது. இந்த உதவி விஜயகாந்த் இருக்கும்போதே செய்திருக்க வேண்டியதுதானே என கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.