Cinema

ஒட்டுமொத்த பாலிவுட்டையும் அதிர்ச்சியடைய வைத்த நடிகையின் மரணம்... உடலைக் கூட வாங்க யாரும் வரவில்லை..!!

MALAVIKA DOSS
MALAVIKA DOSS

திரை உலகில் ஒரு சுவாரசியமான விஷயம் நடைபெற உள்ளது நடைபெறப்போகிறது என்பது குறித்த செய்திகள் வெளிவரும் போது மக்கள் பலர் அதை கொண்டாடுகிறார்கள். அதே சமயத்தில் பல நேரங்களில் திரையுலகினர் பலர் திடீர் மரணத்தையும் தழுவியுள்ளனர். அப்படிப்பட்ட மரணம் மக்களையும் அதிக அளவில் பாதிப்படைய செய்கிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சமீபத்தில் மறைந்த விஜயகாந்த் அவர்களின் மரணம் தமிழக மக்கள் மனதை மிகவும் பாதித்தது.இவருக்கு முன்பாக விவேக் அவர்களின் மரணமும், தான் ஒரு டாக்டர் என்பதையும் தாண்டி நடிப்பிற்கு வந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தின் மூலம் நல்ல வரவேற்பை கண்ட சேதுராமனின் திடீர் மரணமும், எல் கே ஜி திரைப்படத்தில் ஒரு வில்லனாக நடித்திருந்தாலும் நல்ல வரவேற்பை கண்ட ஜேகே ரித்தீஷின் மரணம் மற்றும் ஸ்ரீதேவி என திரை உலகினர் ஒவ்வொருவரின் மரணத்தை பார்க்கும் பொழுது அவர்களை திரையில் கண்டு ரசித்த ரசிகர்களுக்கு பெரும் கவலையை அளிக்கும்.


அதே சமயத்தில் சிலரின் மரணமானது ஒரு புதிராகவும் உண்மையில் இவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா என பல கேள்விகளையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தக்கூடிய மரணங்களாக நடந்துள்ளது.அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங்கின் தற்கொலை ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஏனென்றால் அதிக ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் படத்தில் தோனியாகவே நடித்து அனைவரது மனதிலும் தோனியாகவே இடம்பெற்று விட்டார். இதனால் இவரது மரணம் தமிழக மக்கள் மத்தியிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வரிசையில் பாலிவுட்டை சேர்ந்த ஒரு நடிகையின் மரணம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் யார் வயசில் பணியாற்றி வந்த மாளவிகா தாஸ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மும்பைக்கு வந்திருக்கிறார். தனது கனவை தேடி அசாமில் இருந்து மும்பை வந்த மாளவிகா தாஸ் வால்கமன், சிஸ்கியாம் போன்ற பல வெப் சீரியஸ்களிலும் சில படங்களிலும் நடித்து பிரபலமானவர்.

மேலும் கடந்த ஆண்டு கஜோல் நடித்த ட்ரைலர் வெப் சீரிஸிலும் அவருடன் இணைந்து நடித்து பிரபலமானார் மாளவிகா! இந்நிலையில் கடந்த ஜூன் 6-ம் தேதி பூட்டி இருந்த இவரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர்.இதனை அடுத்து காவல்துறை அதிகாரிகளும் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்க்கும் பொழுது மாளவிகா தாஸ் உயிரிழந்த நிலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து தற்கொலை குறித்த தடையுங்கள் ஏதேனும் இருக்குமா என அவரது மொபைல் போன் மற்றும் மாளவிகாவின் அறையில் ஏதேனும் கடிதம், மருந்துகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்துள்ளனர். ஆனால் அப்படி எதுவும் கிடைக்க பெறவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து மாளவிகாவின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக கூர்க்கானில் உள்ள சித்தார்த் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தற்கொலைக்கான எந்தவித ஆதாரங்களும் கிடைக்காததால் மாளவிகாவின் இந்த மரணம் பலருக்கு பல சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவல்துறையினரும் இது குறித்த விசாரணையை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து நடிகையின் பெற்றோர் மிகவும் வயதானவர்களாகவும் அஸ்ஸாமில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவர்களால் மும்பைக்கு வந்து அவரது உடலை வாங்க முடியாத நிலையில் இருப்பதால் நடிகையின் நண்பரும் நடிகருமான அலோக்நாத் பதக் மாளவிகாவின் உடலை வாங்கி தகனம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி மாளவிகாவின் இறுதி அஞ்சலிக்கு கூட அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒட்டு மொத்த பாலிவுட்டும் அதிர்ச்சியின் உறைந்து போயிருக்கிறது.