24 special

விநாயகர் பிடிக்காது காசு மட்டும் வேண்டுமா...! விளாசிய மக்கள்...!

mk stalin
mk stalin

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் செயல்பட்டு வரும் டிடி 525 எண் கொண்ட கூட்டுறவு சொசைட்டி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டுறவு சொசைட்டியில் இருக்கும் வாகனங்களை அலுவலக ரீதியான பயன்பாட்டிற்கும் விவசாயிகள் தேவைக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் இதனை வாடகைக்கு விடப்பட்டு  சர்ச்சையில் சிக்கியுள்ளது.நேற்று பழனியில் நடைபெற்ற ஹிந்து சக்தி சங்கமம் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது ஆயக்குடி டி.டி 525 பிக்கப்  TN 94C 6105 எண் கொண்ட சரக்கு வாகனம்வாடகைக்கு விடப்பட்டு அதில் விநாயகர் சிலை ஏற்றப்பட்டு ஊர்வலத்தில் சென்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்க செயலர் பாலு என்பவரிடம்  கேட்டபோது அரசு வாகனம் வாடகைக்கு விடப்படும் படி வாய்மொழி உத்தரவு வந்திருப்பதாகவும்,


இதில் வரும் வருமானத்தை வைத்து மாதம் 30 ஆயிரம் ரூபாய் மாதத் தவணை கட்டச் சொல்லி உயர் அதிகாரிகள் கூறியுள்ளதாகவும், இதன் அடிப்படையில் வாகனத்தை வாடகைக்கு விட்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.  மேலும் அந்த சரக்கு வாகனத்திற்கு சீல் பெல்ட் , சீருடை , போக்குவரத்து விதிகளை மீறியது உட்பட அபராதங்கள் விதிக்கபட்டு அபராத தொகைகள் செலுத்தபடாமல் நிலுவையில் உள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு மற்றும் உணவு பொருட்கள் துறை அமைச்சர் சக்கரபாணி மாவட்டத்திலேயே அரசு வாகனத்திற்கு மாத தவனை கட்டுவதற்கு பணம் தேவை என்று கூட்டுறவு சொசைட்டி வாகனத்தை விநாயகர் ஊர்வலத்தில் வாடகைக்கு விடப்பட்ட சம்பவம் இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.எங்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்வதுதான் பிடிக்காது ஆனால் விநாயகர் மூலம் வரும் வருமானம் மட்டும் வேண்டுமா என பலரும் திமுக அரசின் நிர்வாகத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.