![Jayalakshmi, Snehan](https://www.tnnews24air.com/storage/gallery/TK56cbsx9hMp6UnxTfCPlFF5ACH7XJCsIeIDjEBc.jpg)
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு 'சினேகம் பவுண்டேஷன்' பெயரை பயன்படுத்தி நடிகையும் பாஜக நிர்வாகியுமான ஜெயலக்ஷ்மி பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவருமான சினேகன் சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கைது செய்தது பரப்பரப்பை ஏற்படுத்தியது. நடிகை ஜெயலட்சுமி ஒரே வார்த்தையில் அன்னவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
சிநேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது என நடிகை ஜெயலட்சுமி மற்றும் திரைப்பட பாடல் ஆசிரியர் சினேகன் ஆகியோர். சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ஜெயலட்சுமி மற்றும் சினேகன் இடம் விசாரணை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்திருந்தனர். அப்போது, தான் பாஜகவில் வளர்ந்து வருவதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் மக்கள் நீதி மய்ய கட்சியில் இருக்கும் சினேகன் தன் மீது அவதூறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார் என்றார்.
இதனைத்தொடர்ந்து சினேகன் மீண்டும் நடிகை ஜெயலக்ஷ்மி மீது புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டு அவரை விசாரிக்க காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது, நடிகை ஜெயலக்ஷ்மி போலீசார் வாகனத்தில் அழைக்கும்போது நான் என தவறு செய்தேன் என்றும் உங்களது வாகனத்தில் வர மாட்டேன் என்னுடைய வாகனத்தில் தான் வருவேன் என கூறினார். இருப்பினும் காவல் நிலையம் சென்ற பிறகும் வருகிற மார்ச் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றமும் உத்தரவிட்டது இதற்கிடையில் பேசிய நடிகை ஜெயலக்ஷ்மி, திமுகவினரையும் முதல்வரையும் திருப்திப்படுத்த எந்த தவறுமே செய்யாத என்னை போலீஸார் கைது செய்கிறார்கள் என கட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து, புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார் ஜெயலட்சுமி. அப்போது பேசிய சினேகன், என் மீது எந்த வித தவறும் இல்லை அவர் தான் என் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் கூட்டம் சாட்டி வந்தார் என்பது போல் பேசினார். ஆனால், நேற்றைய தினமே அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.. ஜாமீனில் வந்ததுமே நடிகை ஜெயலட்சுமி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "நீதி வெல்லும் வருங்காலம் பதில் சொல்லும், எனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக ஆர்வலர்கள் பாஜக நிர்வாகி ஜெயலக்ஷ்மி ஆதரவு கொடுத்து வருகின்றனர். சினேகன் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இளைஞர் அணி மாநில செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.