24 special

விராட் கோலி ஓய்வா! கோலி சொன்ன வார்த்தை! ஆழ்ந்த சோகத்தில் ரசிகர்கள்!

Virat Kohli
Virat Kohli

டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக 13,000 ரன்கள், 50 ஓவர், 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதுகள் என்று இந்தியாவின் சாதனை மகனாக நிற்கிறார் ரன் மெஷின் விராட் கோலி.சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகப்படியாக 49 சதங்களை அடித்த சச்சின் சாதனையை முறியடித்தவர் விராட் கோலி. 49 சதங்களை அடிக்க சச்சின் டெண்டுல்கர் 493 போட்டிகளை எடுத்துக்கொண்ட நிலையில், வெறும் 291வது போட்டியிலேயே அந்த சாதனையைமுறியடித்தவர் விராட் கோலி.இந்த நிலையில் ஓய்வுக்கு பின், என்னை கிரிக்கெட் பக்கம் சிறிது காலம் பார்க்க முடியாது,'' என விராட் கோலி சொன்ன வார்த்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் விராட் எப்போது ஓய்வை அறிவிக்க போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டாம் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதுகுறித்து விராட் கோலி  ஓப்பனாக பேசியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் அடையாளமாக திகழும் முன்னணி வீரர்களில் ஒருவர் விராட் கோலி இந்திய அணியில் இடம் பிடித்ததில் இருந்து இன்று வரை தனது பேட்டிங்கினால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகின்றார். தற்போது அணியின் சீனியர் வீரராக உள்ள விராட் கோலி தற்போது அணிக்கு முக்கியமான வீரராக இருப்பதுடன் அணியில் இருந்து கொண்டே அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் பணியையும் செய்யவேண்டிய இடத்தில் இருகின்றார். இந்தியாவில் நடைபெற்று வரும் தற்போதைய ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணிக்காக வேற லெவலில் ஆடி வருகிறார். 13 போட்டிகளில் 661 ரன் (சராசரி 66.10, 'ஸ்டிரைக் ரேட்' 155.16) குவித்து, முதலிடத்தில் நீடிக்கிறார். 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ள நிலையில், விராட் கோலி உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. ஏற்கனவே ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அசத்தலான விளையாடி தொடர் நாயகன் விருதை கைப்பற்றிய விராட் கோலி, இம்முறை இந்திய அணிக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்புடன் இருக்கிறார்.இதனிடையே விராட் கோலி 35 வயதை எட்டிவிட்ட சூழலில், ஓய்வு பற்றிய பேச்சுகளும் எழுந்துள்ளன. ஏற்கனவே ஒருநாள் தொடருக்கு விராட் கோலி முக்கியத்துவம் அளிப்பதை குறைத்துள்ள நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் டி20 போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் விராட் கோலியின் ஆட்டம் மற்றும் களத்தில் அவரது செயல்பாட்டினைப் பார்க்கும்போது அவர் தனது ஓய்வை அவர் விருப்பப்படும் நேரத்தில் எடுக்கலாம் என பல வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்திய இளம் அணி தற்போது டி20 போட்டித் தொடர் மற்றும் ஒருநாள் போட்டி டெஸ்ட் தொடர் என மூன்று வகை கிரிக்கெட் சிறப்பாக தொடரிலும் விளையாடி வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து வீராட் கோலி கூறுகையில்,''வீரர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்க முடியாது. ஒருநாள் ஓய்வு பெற்றாக வேண்டும். என்னை பொறுத்தவரை விளையாடும் காலத்தில், இதை செய்ய தவறி விட்டோமே என்ற வருத்தத்துடன் விடைபெற விரும்பவில்லை. நான் நினைத்ததை செய்து முடித்துவிட வேண்டும். களத்தில் நுாறு சதவீதம் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுகிறேன். இந்த எண்ணம் தான் தொடர்ந்து விளையாட ஊக்கம் தருகிறது, ஓய்வை அறிவித்துவிட்டால், அதற்கு பின் சிறிது காலம் என்னை கிரிக்கெட் பக்கம் பார்க்க முடியாது,''என்றார்