
தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பரபரப்பாகவும் ஹார்ட் டாப்பிக்காவும் ஓடிக் கொண்டிருக்கிற விஷயம் ஜீவி பிரகாஷ் மற்றும் சைந்தவியில் விவாகரத்து தான்! இவர்கள் பல வருடங்களாக காதலித்து பிறகு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதோடு திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கும் நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பை இருவரும் வெளியிட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் பாடகராகவும் உள்ள ஜிவி பிரகாஷ் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்களின் அக்கா மகன் என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஏ ஆர் ரகுமானின் இசை எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறதோ அதேபோன்று ஜிவி பிரகாஷ் இசைக்கும் மற்றொரு தரப்பு உள்ளது அவரது பாடலுக்கும் அதிக பேன்ட் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். ஜி வி'யைப் போன்று சைந்தவியின் குரலுக்குமே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
இப்படி இசையில் தனது அடுத்த கட்ட படிகளை நோக்கி சென்று கொண்டிருந்த ஜி வி பிரகாஷ் திடீரென நடிக்கவும் ஆரம்பித்தார் அதுவும் அவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் அனைத்துமே கிசுகிசுக்களை கொண்டிருந்தது. அதோடு அவர் நடிக்கும் படங்கள் முழுவதிலும் நடிகைகளுடன் அதிகம் இருக்கும் காட்டும் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருந்தது. மேலும் கடைசியாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டியர் மற்றும் கள்வன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெருமளவிலான வரவேற்பை அவருக்கு பெற்று தரவில்லை. முன்னதாக தனது பள்ளி பருவத்தின் தோழியாக இருந்து பிறகு காதலித்து சைந்தவியை ஜிவி பிரகாஷ் திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்த சமந்தா நாக சைதன்யா, தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தம்பதிகளை போன்று இவர்களும் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது தமிழ் சினிமா பிரபலங்களுக்கே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் இவர்களது விவாகரத்து குறித்த தகவல்களை இவர்கள் இருவருமே தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர்.
அதில், நீண்ட யோசனைக்குப் பிறகு, சைந்தவியும் நானும் திருமணமாகி 11 வருடங்கள் கழித்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்தோம் என்று குறிப்பிட்டு தங்களது விவாகரத்தை உறுதிப்படுத்தினார்கள். இருவருமே மன அழுத்தம் மற்றும் மன அமைதிக்காக என்ற கருத்தை முக்கியப்படுத்தி அதற்காகவே விவாகரத்து பெறுகிறோம் என கூறி உள்ளதன் பின்னணியை விசாரிக்கும் பொழுது, ஜிவி பிரகாஷின் தாய் வேறு மதத்திற்கு மாறியதும் ஆனால் சைந்தவியின் வீட்டார் முழுக்க முழுக்க ஒரு இந்துவாக இருந்துள்ளதாலும் இரு குடும்பத்தினருக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகள் ஏற்பட்டு கொண்டே உள்ளது அதோடு ஜிவி பிரகாசும் இசையை தவிர்த்து படங்களிலும் நடித்து அந்த படங்களில் நடிகைகளுடன் அதிக நெருக்கம் காட்டி வருவதாகவும் வெளியான செய்திகள் அதுமட்டுமின்றி குழந்தை பிறந்தவுடன் ஜி வி பிரகாஷ் நடவடிக்கைகள் அனைத்தும் சரிவரவில்லை என்ற மனக்கசப்பு இதனால் குழந்தைக்காக இருவரும் ஒன்றாக வாழ முயற்சித்தும் இருவராலும் முடியவில்லை அதன் பிறகு தங்களது மன நிம்மதிக்காக இது போன்ற விவாகரத்து முடிவை அவர்கள் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது! மேலும் ஜிவி பிரகாஷின் மாமாவான ஏ ஆர் ரகுமான் விவாகரத்து எல்லாம் வேண்டாம் என்று சில அறிவுரைகளை கூறியும் இருவரும் விவாகரத்தில் உறுதியாக நின்றனர் என்று விமர்சகராக உள்ள பயில்வான் ரங்கநாதன் வேறு தெரிவித்து சமூக வலைதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.