24 special

பேட்டியில் திமுகவை மறைமுகமாக தாக்கிய விஷால்!! முட்டிகிச்சு சண்டை....

VISHAL, MKSTALIN
VISHAL, MKSTALIN

தமிழ் சினிமா உலகில் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பின்னணி பாடுகராகவும் மேலும் இயக்குனராகவும் இருந்து பல துறைகளில் தனது திறமையினை வெளிக்காட்டி வரும் ஒரு பிரபலம் தான் நடிகர் விஷால்!! இவர் தமிழில் செல்லமே என்னும் திரைப்படத்தில் அறிமுகமாகி இதன் பிறகு சண்டக்கோழி போன்ற பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இவரின் நடிப்பு மிகவும் இயல்பாகவே இருந்த காரணத்தினால் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருந்தனர். முதலில் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த நடிகர் விஷால் அதன் பிறகு தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோ ஒன்றை துவங்கி அதில் தானே நடித்து பல திரைப்படங்களில் வெற்றிகளும் கண்டு வந்தார். 2023 ஆம் ஆண்டு மார்க் ஆண்டனி என்னும் திரைப்படத்தில் நடித்து திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. இந்த நிலையில் சென்னையில் சமீபத்தில் மழையினால் வெள்ளம் ஏற்பட்டபோது விஷாலின் வீட்டில் மழைநீர் முழுக்க தேங்கி இருப்பதையும், இதற்கிடையில் மாட்டிக்கொண்டதாக வீடியோ எடுத்து இணையதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து இப்படிப்பட்ட நிலைமையை மாற்ற வேண்டும் என்று ஒரு பேட்டியின் போது அவர் 2026 ஆம் ஆண்டில் வரப்போகும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறியிருந்தார். 


ஆனால் இவர் தனியாக ஒரு கட்சி ஆரம்பிக்கப் போகிறாரா  அல்லது ஏற்கனவே உள்ள ஏதேனும் கட்சியில் கூட்டணி அமைக்கப் போகிறாரா என்ற தகவல்கள் இன்றும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணியாக அமைக்கப் போகிறார் என்றால் இவர் எந்த கட்சியில் கூட்டணி அமைப்பாளர் என்று பல கேள்விகளும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் விஷால் நடிப்பில் தற்போது ரத்தினம் என்னும் திரைப்படம் வெளியாகி உள்ளது. இது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று அதிக அளவில் ரசிகர்கள் வந்து பார்க்கும் திரைப்படமாகவும் நல்ல கருத்துரையை திரைப்படமாகவும் அமைந்திருக்கிறது. மேலும் ரத்தினம் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில் பல தனியார் youtube சேனல்களுக்கு நடிகர் விஷால் பேட்டி அளித்து வருகிறார். அதில் ஒரு பேட்டியின் போது ஒரு குடும்பத்திலிருந்து மட்டும்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் நீ எதற்காக புத்தகங்களில் சோசியல் பொலிடிகல் படத்தை வைத்திருக்கிறீர்கள்?? அப்படி ஒன்று தேவை இல்லையே எடுத்து விடுங்கள் என்றும், நீங்கள் மட்டுமே வந்து கொள்ளலாம் மற்றவர்கள் யாரும் வர வேண்டாம் என்று திமுக சுட்டிக்காட்டி பலவாறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இப்படி இவரின் வீட்டினுள் வெள்ளம் வந்து நீர் தேங்கியது முதல் தற்போது வரை இவர் அதிக அளவில் திமுக விற்கு எதிர்ப்பு காட்டி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. தற்போது மீண்டும் ஒரு தனியார் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்த நடிகர் விஷால் லண்டனில் ஒரு நான்கு வீடு, துபாயில் கப்பல்கள், மேலும் ஆயிரம் கோடி மற்றும் வங்கிகளில் பத்தாயிரம் கோடி இதையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன பண்ணப் போகிறார்கள் என்று தெரியவில்லை!! மூன்று வேளை சோறு ! தண்ணீர்!! ஒரு வாகனம்!! ஒரு வீடு மிஞ்சிப் போனால் மேலும் இரண்டு இடங்களில் வீடு வைத்துக் கொள்ளலாம். ஆனால் சொத்து சேர்ப்பதில் அடுக்கிக் கொண்டே போனால் என்ன செய்வது என்று கூறியுள்ளார். இப்படி இவர் கூறி இருப்பது யாரை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் அரசியல் வட்டாரங்களில் இது குறித்து விசாரிக்கும் பொழுது விஷால் திமுகவை தான் மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார் என்றும், அவர்கள் தான் தற்போது குடும்பம் குடும்பமாக சொத்து சேர்த்து வருகிறார்கள். மேலும் தனது நண்பர் என்று பார்க்காமல் கூட உதயநிதியை விஷால் எதிர்த்து நிற்க கூடும் என்று பலவாறு கூறப்படுகிறது.