Cinema

அபிநந்தனை போல நடித்தது எனக்கு பெருமை!! நடிகர் பிரசன்னா பெருமையால் போராளிகள் ஆவேசம்...

ACTOR PRASANNA
ACTOR PRASANNA

இந்தியாவிற்கு இயற்கையாகவே அமைந்திருக்கும் ஒரு பாதுகாப்பான விஷயம் என்றால் அது இமயமலை தான். மேலும் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காக மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது தான் இந்திய ராணுவம் என்பது. இந்திய ராணுவத்தில் உள்ள வீரர்கள் கடும் குளிர்,மழை, வெயில் என்று கூட பார்க்காமல் கண்ணும் கருத்துமாக இருந்து நமது இந்தியாவை மற்ற நாடுகளின் மத்தியில்  பாதுகாத்து வருகின்றனர். இருந்தாலும் கூட அவ்வபோது பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவை நோக்கி எதிர்ப்பு காட்டும் வகையில் சில தாக்குதல்களும் ஏற்படுத்தப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல்களின் பல இந்திய வீரர்கள் தாக்கப்பட்டு உயிரிழந்தும் போகின்றனர்.  மேலும் சில இந்திய வீரர்கள் தொடர்ந்து போராடி வெற்றி பெற்று அவரின் குடும்பத்தார்களுக்கு மேலும் பெருமையை சேர்த்து வருகின்றனர். இப்படி கடுமையாக போராடும் இந்திய ராணுவத்தில் உள்ளவர்களையும், ராணுவத்தையும் பாராட்டும் வகையில் பல திரைப்படங்கள் வெளியாகி கொண்டே தான் உள்ளது. அந்த வரிசையில் தற்போது ஒரு திரைப்படம் வெளியாகி உள்ளது!! அது என்னவென்றால்???


 நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளிவந்துள்ள ரண்ணீதி: பாலகோட் அண்ட் பியாண்ட் என்னும் திரைப்படம். இது தற்போது இந்திய ராணுவத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜிம்மி ஷெர்கில், அஷுதோஷ் ராணா, ஆசிஷ் வித்யார்த்தி, லாரா தத்தா போன்றோர் நடித்துள்ளனர். மேலும் திரைப்படத்தை சந்தோஷ் சிங் இயற்றியுள்ளார். அதோடு இந்த திரைப்படமானது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. இது எவ்வித கதையை உள்ளடக்கி உள்ளது என்று பார்த்தால்!!!2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் ஏற்பட்ட தாக்குதல்களில் 44 ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இயங்கி வந்த ஜெய்ஷ் இ முகமது இன்னும் பயிற்சி மையத்தை குறி வைத்தது, இதில் 300 ருக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து பாகிஸ்தானின் எஃப்16 என்னும் பாகிஸ்தான் விமானம் ஆனது  இந்திய எல்லைக்குள் அத்துமீறி வீரர்களை கொன்றது.

அந்த சமயத்தில் தான்  இந்திய விமானப்படையின் மிக்-21 ரகத்தை சேர்ந்த விமானமானது பாகிஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்தது. அதிலிருந்த போர் விமானியான அபிநந்தனை பாகிஸ்தான் அரசு சிறைபிடித்தது. ஆனால் அதன் பிறகு பல்வேறு உலக நாடுகள் கொடுக்க அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அவரை விடுவித்தது.இந்த தாக்குதலில் ஏற்பட்ட பல உண்மை சம்பவங்களும் இன்னும் வெளிவராத பல செய்திகளும் இந்த திரைப்படத்தில் காட்சியாக அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த கதையில் வரும்  அபிநந்தனாக நடிகர் பிரசன்னா நடித்துள்ளார். தற்போது இந்த திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் திரைப்படம் பற்றி நடிகை பிரசன்னா, அபிநந்தன் கேரக்டரில் நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை பெருமையாக நினைப்பதாகவும், பல உண்மை சம்பவங்கள் இந்த வெப் சீரிஸில் உள்ளடக்கி இருப்பதாகவும், காஷ்மீரில் மைனஸ் 4 டிகிரி குளிரில் பாகிஸ்தானிடம்  அபிநந்தன் சிக்கிய போதும் ரகசிய ஆவணங்களை எப்படி தண்ணீரிலும்,பாதி வாயிலும் போட்டு அளித்தார் என்பது படப்பிடிக்கப்பட்டது அதையும் கூறியுள்ளார். இவ்வாறு இதில் நடிப்பதில் ஏற்பட்ட கஷ்டங்களையும், மேலும் உண்மை சம்பவத்தில் ஈடுபட்டிருந்த நபர்களை சந்தித்த அனுபவத்தையும் ஊறி இந்த திரைப்படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்!!  மேலும் ரவுடி, போதை பொருள் கடத்தல்காரன் என போராளிகள் படம் நடைக்கும் வேளையில் இப்படி தேசத்திற்கு பெருமை சேர்த்த  கதாபாத்திரத்தில் பிரசன்ன நடித்திருப்பது பலரின் பாராட்டை பெற்று வருகிறது.....