பிரபல ஊடகவியலாளர் பாண்டே நடத்திவரும் சாணக்யா இணைய ஊடகம் மீண்டும் முடக்கப்பட்டுள்ள செய்தியை பாண்டே உறுதி செய்துள்ளார், இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்ததாவது, 48 மணி நேரத்துக்கு முன்னாடி இருந்த அதே நிலை. சாணக்யா யூடுப் பக்கத்தை மீண்டும் ஹேக் செய்து இருக்கிறார்கள். முறையீடு செய்திருக்கிறோம். இறைவன் கருணை, உங்கள் அன்பால் மீண்டு(ம்) வருவோம். மற்றவை வழக்கம் போல். #istandwithchanakya என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 16 ம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு சாணக்யா ஹேக் செய்து முடக்கப்பட்ட பிறகு சரியாக 24 மணி நேரத்தில் அதனை சாணக்யா குழு மீட்டது, இந்த சூழலில் தற்போது மீண்டும் அந்த சேனல் முடக்கப்பட்டுள்ளது, இந்த முறை சாணக்யா சேனல் முடக்கப்பட்டது திட்டமிட்ட சதி என அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சரியாக பாண்டே பிறந்தநாளை தேர்வு செய்து அந்த நாளில் முடக்கிவர்கள் தற்போது மீண்டும் சானலை முடக்கியுள்ளனர், இது ஏதோ முகம் தெரியாதவர்கள் செய்த வேலை இல்லை திட்டமிட்டு பாண்டே பணியை முடக்கவேண்டும் என்ற ரீதியில் யாரையோ ஏவிவிட்டு இந்த செயலை செய்துள்ளனர்.
விரைவில் இதில் இருந்து மீண்டு வருவோம் எவ்வாறு சாணக்யா தொடங்கிய காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து மீண்டோமோ அதே போல் இதில் இருந்தும் பாண்டே மீண்டு வருவார் என்கின்ற அந்நிறுவன வட்டாரங்கள்.
அதே நேரத்தில் எப்படி கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் ஆடியோ உரையாடலை பாண்டே வெளியிட்டாரோ அதே போன்று வேறு ஒரு முக்கிய தகவலை பாண்டே வெளியிட திட்டம் இருந்ததாகவும் இதனை அறிந்த ஒரு தரப்பு அவரது சேனலை முடக்க நினைத்து திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
மொத்தத்தில் ஊடக சுதந்திரம் என்பது அனைத்து தரப்பிற்கும் பொதுவானது என்ற நிலையில் சாணக்கியா திட்டமிட்டு தாக்குதலுக்கு உள்ளாவது அதன் நீட்சியை காட்டுவதாகவும் விரைவில் அடுத்த அதிரடியுடன் பாண்டே களம் இறங்குவார் என்பதே அவரது ஆதரவாளர்களின் தற்போதைய எதிர்பார்பாக உள்ளது!