ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சில அமைப்புகள் தூண்டுதலில் ஈடுபட்டு மாணவர்கள் இளைஞர்கள் போராட்டத்தை மத்திய அரசிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் திசை திருப்பின என்ற குற்றசாட்டை பல முறை பாஜகவினர் எழுப்பி வந்தன, மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பயன்படுத்தி அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பிம்பத்தை உயர்த்த பத்திரிகையாளர்கள் சிலர் இணைந்து செயல்பட்டதாகவும் குற்றசாட்டு எழுந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக இளம் வாக்காளர்கள் மனநிலை மாற ஜல்லிக்கட்டு போராட்டமும் ஒரு முக்கிய காரணம் என அடுத்தடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் வெளிவந்தது, இந்த சூழலில் அந்த நிலை அப்படியே மாறியுள்ளது, எப்படி பிரதமருக்கு எதிராக போராட்டம் திரும்பியதோ.. அதே போல் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக மாணவர்கள் மனநிலை மாறியுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஆன்லைன் வழி பாடம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்வுகளும் ஆன்லைனின் நடந்தது. தற்போது, நேரடியாக தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று நடைபெற இருந்த 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, கோரிப்பாளையத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சென்னையில் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் குவிந்து போராட்டம் நடத்தினர், இதில் பல மாணவர்கள் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர், பெண் மாணவி ஒருவர் போன முறை அதிமுக ஆட்சியில் ஆன்லைன் வழியில் தேர்வு நடத்த வேண்டும் என சொன்னவரே ஸ்டாலின் தான் ஆனால் இப்போது அவரே தேர்வு வைப்பது இது என்ன ஏமாற்று வேலை என தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர் ஒருவர் விடியல் விடியல் என சொல்லி வாக்கு வாங்கிவிட்டு இதுதான் நீங்கள் கொடுத்த விடியலா என ஆவேசமாக கேள்வி எழுப்பும் வீடியோ தமிழகத்தில் மாணவர்கள் மனநிலை என்ன என அறிய முடிகிறது , இந்த சூழலில் மாணவர்கள் போராட்டம் பெரிய அளவில் மாநிலம் முழுவதும் வெடிக்கலாம் என்ற உளவு அமைப்புகளின் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு இன்று தமிழக அமைச்சரவையை கூட்ட திட்டமிட்டு இருந்ததாம்.
ஆனால் கனமழை எச்சரிக்கை காரணமாக வரும் 20ம் தேதி அமைச்சரவையை கூட்ட முடிவு செய்துள்ளதாம் தமிழக அரசு, அன்று பிரதமருக்கு எதிராக திரும்பிய இளம் வாக்காளர்கள் இன்று முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக திரும்பி இருப்பது இனி பாஜகவிற்கு ஏறுமுகமாகவும், திமுகவிற்கு இறங்கு முகமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மாணவர்கள் ஆவேசமாக பேசிய வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.