24 special

எங்களுக்கும் செந்தில்பாலாஜி வேணும்...!புதிதாக இணையும் முக்கிய குற்றப்பத்திரிகை...!

Senthil balaji
Senthil balaji

வேலை வாங்கித்தருகிறேன் என பணமோசடி குற்றத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் ஒவ்வொரு வழக்குகளையும் சந்தித்து வருகிற செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் செந்தில் தரப்பிற்கு எதிராகவே தற்போது வழக்குகள் ஒவொன்றும் திரும்பிவருகிறது. 


செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார் அதன் விசாரணையை முடித்து தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகளும் இரண்டு வெவ்வேறு கருத்துக்களை தீர்ப்பாக தெரிவித்ததால் மூன்றாம் தரப்பு நீதிபதியை நியமித்து வழக்கு விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி மூன்றாம் தரப்பு நீதிபதியாக சி வி கார்த்திகேயன் அமர்த்தபட்டார். அவர் அமர்வில் இரண்டு கட்டமாக நடந்த விசாரணையின் முடிவில் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அதிகாரம் உள்ளது. அவரும் சட்டத்திற்கு உட்பட்டவர் தான், அதனால் அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் என்று தீர்ப்பளித்தார். 

இதற்கிடையில் வருமானவரித்துறையும் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் கரூரில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில் கடந்த மே 16ஆம் தேதி அன்று போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது, அதில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக வாங்கிய பணம் தொடர்பான புகார்களை தொடக்கத்திலிருந்து முழுமையாக விசாரணை செய்ய வேண்டும் என்றும், இந்த விசாரணைக்காக சிறப்பு விசாரணை குழு தேவைப்பட்டால் அமைத்து விசாரிக்கலாம், மேலும் இது பற்றிய முழு விவரங்களை அறிக்கையாக இரண்டு மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. 

அதோடு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு எதிராக அனுப்பிய சம்மனை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வெளிவந்து ஒரு மாதங்களாக உள்ள நிலையில் செந்தில் பாலாஜி மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை முடிக்க கூடுதலாக ஆறு மாசம் தேவைப்படுகிறது என்று மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளனர். 

அந்த மனுவில் செந்தில் பாலாஜி மோசடி செய்தவர்களை சாட்சிகளாக மாற்ற 318 சாட்சிகளுக்கு விசாரணை அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இவர்களில் இதுவரை 152 பேர் மட்டுமே ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர், செந்தில் பாலாஜி முறைகேடு செய்த காலகட்டத்தில் 2974 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான விவரங்களை தற்போது எடுத்து சாட்சிகளை ஆஜராக உத்தரவிட்டாலும் அவர்களில் சிலர் முகவரிகளை மாற்றி சென்றுள்ளனர் இதன் காரணமாக அவர்களை அணுகுவது மிகவும் எளிதானதாக இல்லை அதனால் இந்த வழக்கு மீதான விசாரணை நடவடிக்கைகளை முடித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு கூடுதலாக ஆறு மாத கால அவகாசம் தேவைப்படுகிறது என்று அந்த மனுவில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குறிப்பிட்டுள்ளனர். 

இந்த ஆறு மாதத்திற்குள் செந்தில் பாலாஜி மீதான வழக்கு பற்றிய முழு ஆதாரங்களின் திரட்டி, அந்த ஆதாரங்களை வைத்து செந்தில் பாலாஜி சட்டரீதியாக தப்ப முடியாத அளவிற்கு குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்ய குற்று பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது இதனாலே ஆறு மாத காலம் அவகாசம் கேட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.