24 special

நீதிபதி கொடுத்த தீர்ப்பு ...!செந்தில்பாலாஜி அரசியல் வாழ்க்கையே க்ளோஸ்...!ரெடியான சிறை...!

Senthil balaji,enforcement
Senthil balaji,enforcement

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை விசாரணை செய்யலாம் எனவும் அவரது கைது சட்ட விரோதம் இல்லை இன்றும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அமலாக்கதுறைக்கு யாரை விசாரணை செய்யவும் எங்கும் உள்ளே நுழையவும் சட்டத்தில் அனுமதி இருக்கிறது என நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி வி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கினார்.


இது செந்தில் பாலாஜி வழக்கில் இதுநாள் வரை நிலவிவந்த அனைத்து கோணங்களுக்கும் முற்று புள்ளி வைத்தது, இந்த நிலையில்தான் தற்போது செந்தில் பாலாஜியை விசாரணை செய்யவும் நீதிமன்ற காவலில் இருந்து அமலாக்கதுறை காவலில் எடுக்கவும் சிறப்பு குழு சென்னை வந்து அடைந்து இருக்கிறதாம்.

இவர்கள் செந்தில் பாலாஜி சிகிச்சை பெரும் மருத்துமனைக்கு செல்லவும் செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது,நீதிமன்ற உத்தரவின் முழு நகலை பெறவும் மேலும் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து அறிந்து அவரை முதலில் புழல் சிறைக்கு மாற்றவும் அமலாக்க துறை திட்டமிட்டு இருக்கிறதாம்.

செந்தில் பாலாஜி மற்றும் தமிழக அரசு அமலாக்கதுறை விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காத பட்சத்தில் செந்தில் பாலாஜியை நேரடியாக டெல்லி அழைத்து செல்லவும் அவரை திகார் சிறையில் வைத்து விசாரணை செய்யவும் தகுந்த சட்ட ரீதியிலான நடவடிக்கைக்கும் அமலாக்கதுறை தயாராகி இருக்கிறது.

நீதி மன்றத்தில் நிலவி வந்த சட்ட போராட்டம் முடிவிற்கு வந்த காரணத்தால் தற்போது அமலாக்க துறை செந்தில் பாலாஜி வழக்கில் முழுமையாக உள்ளே வந்து இருக்கிறது மேலும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் பல முறை சம்மன் அனுப்பியும் அவரும் தனக்கு இதய கோளாறு இருப்பதாக கூறி விசாரணயில் இருந்து தப்பித்து வருவதால் அவரை சில நாட்களுக்குள் கைது செய்யவும் மேலும் இந்த சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் தொடர்பு உடைய அனைவரையும் கைது செய்யவும் முன்னேறப்பாடுகளுடன் அமலாக்க துறை உள்ளே நுழைந்து இருப்பதால் யாரும் தப்ப முடியாத சூழல் உண்டாகி இருக்கிறதாம்.

அமலாக்க துறை கைது செய்து செந்தில் பாலாஜியை திகார் சிறைக்கு அழைத்து செல்லும் பட்சத்தில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து முழுமையாக நீக்கம் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதால் இப்போதே கரூர் வட்டாரம் கடும் கவலை அடைந்து இருக்கிறதாம்.வருமான அதிகாரிகள் மீது கைவைத்த பலனும் தொடர்ச்சியாக ஈரோடு தேர்தல் பட்டி மாடலும் தான் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையை புரட்டி போட்டு இருப்பதாக பேசப்படுகிறது.