World

நடுவில் தான் இருக்கிறோம் ஒரே வார்த்தை உலக நாடுகளை கவனம் பெற செய்த இஸ்ரேல் பிரதமர்!!

நடுவில் தான் இருக்கிறோம் ஒரே வார்த்தை உலக நாடுகளை கவனம் பெற செய்த இஸ்ரேல் பிரதமர்!!
நடுவில் தான் இருக்கிறோம் ஒரே வார்த்தை உலக நாடுகளை கவனம் பெற செய்த இஸ்ரேல் பிரதமர்!!

ஏழு நாட்களாக தொடர்ந்து வரும் பாலஸ்தீன தீவிரவாதிகள் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான போரில் முக்கிய கட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஹமாஸ் இயக்கத்தை சார்ந்த தீவிரவாதிகளின் முக்கிய தலைவனின் இல்லத்தை இஸ்ரேல் ராக்கெட் விட்டு தகர்த்தது. 


அதில் தீவிரவாத தலைவன் பலியானான். கடந்த ஏழு நாட்களுக்கு முன்பு ஹமாஸ் தீவிரவாத அமைப்பு நூற்றுக்கும் மேற்பட்ட ராக்கெட் தாக்குதல் நடத்தியது.அதற்கு பதிலடியாக களத்தில் இறங்கியஇஸ்ரேல் துல்லியமாக தீவிரவாதிகளின் துருப்புக்களை தேடித்தேடி களையெடுத்து வருகிறது.

இதில் முத்தாய்ப்பாக நேற்று அல்ஜஸீரா மற்றும் அசோசியேட் பிரஸ்  மீடியாக்கள் செயல்பட்டு வந்த கட்டிடங்களை இஸ்ரேல் தகர்த்தெறிந்தது..தாக்குதல் நடத்தும் ஒரு மணி நேரம் முன்பே அந்த கட்டிட உரிமையாளருக்கும் அல்ஜஸீரா அசோசியேட் பிரஸ் ஆகிய இரு மீடியாக்களுக்கும் தகவலை இஸ்ரேல் கடற்படை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ இந்த தாக்குதல் பற்றி வெளியிட்ட தகவலில்"போரின் நடுவில் தான் இருக்கிறோம்.இன்னும் தாக்குதல் முடிவடையவில்லை. தீவிரவாதிகளை அழிக்கும் வரை இஸ்ரேல் ஓயாது" என கூறியுள்ளார்.இண்டர்நேஷனல் கிரிமினல் கோர்ட் மூத்த வழக்கறிஞர் கூறுகையில்"நிலைமையை ஐ.நா மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது" என குறிப்பிட்டார்.

"அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் மனித கேடயமாக பயன்படுத்துகிறார்கள். இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 14 குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகியுள்ளனர்*என இஸ்ரேல் கடற்படை தெரிவித்துள்ளது.

" ஹமாஸ் தீவிரவாத அமைப்பு டபுள் வார் க்ரைம் செயலில் ஈடுபடுகிறது. குழந்தைகளை மனித கேடயமாக பயன்படுத்துவதை இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது " என நெதன்யாஹூ தெரிவித்தார்.இது நெதன்யாஹூவின் ஆதங்கம் மட்டும் அல்ல மனசாட்சி உள்ள ஒவ்வொரு மனிதரின் ஆதங்கம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.